கனடா நாடாளுமன்றத்தில் ஈழத்தமிழர்கள் - ஹரி மற்றும் யுவனிதா வெற்றி

Sri Lankan Tamils Canada Gary Anandasangaree Mark Carney
By Sathangani Apr 29, 2025 02:08 PM GMT
Sathangani

Sathangani

in கனடா
Report

கனேடிய நாடாளுமன்றத்தில் முதன் முறையாக ஈழத்தமிழ் பூர்வீகத்தைச் சேர்ந்த இருவர் ஏக காலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தெரிவாகியுள்ளனர்.

நேற்று (28) இடம்பெற்ற கனேடிய பொதுத்தேர்தலில் (2025 Canada elections)  ஈழத்தமிழ் பூர்வீகத்தைச் சேர்ந்த ஐந்திற்கு மேற்பட்ட தமிழ் கனேடியர்கள் போட்டியிட்டனர்.

இந்தநிலையில் அவர்களில் ஹரி ஆனந்தசங்கரி (Gary Anandasangaree) மற்றும் யுவனிதா நாதன் (Juanita Nathan) ஆகியோர் ஆளும் கட்சியான லிபரல் கட்சியில் வெற்றி பெற்றுள்ளனர்.

கனடா தேர்தலில் காலிஸ்தான் தலைவர் படுதோல்வி - வெளியிட்ட அறிவிப்பு

கனடா தேர்தலில் காலிஸ்தான் தலைவர் படுதோல்வி - வெளியிட்ட அறிவிப்பு

இரு ஈழத்தமிழர்கள் வெற்றி

தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில் இந்த தேர்தலில் பிரதமர் மார்க் கார்னியின் (Mark Carney) லிபரல் கட்சி அறுதிப் பெரும்பான்மைக்கு குறைவான பலத்துடன் வெற்றி பெற்றுள்ளது.


இந்த தேர்தலில் ஆளும் லிபரல் கட்சியில் இருந்து ஈழத்தமிழ் பூர்விக தமிழ் கனேடியரும் கனேடிய நீதி அமைச்சருமான ஹரி ஆனந்தசங்கரி தனது ஸ்கார்பாரோ - கில்ட்வுட் - ரூஜ் பார்க் தொகுதியில் போட்டியிட்டிருந்தார். அதேபோல ஆளும் கட்சியில் இருந்து யுவனிதா நாதனும் பிக்கரிங் - புரூக்ளின் தொகுதியிலும் களம் இறங்கியிருந்தார்.

இதேபோல கென்சவேட்டிவ் கட்சியில் இருந்து லயனல் லோகநாதன், நிரான் ஜெயநேசன் ஆகிய ஈழத்தமிழ் பூர்வீக தமிழ் கனேடியர்ளும் பசுமை கட்சியில் இருந்து இன்னொரு ஈழத் தமிழரும் போட்டியிட்டிருந்தார்.

இவர்களில் ஹரி ஆனந்தசங்கரி தனது தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார். இவருக்கு 34,941 வாக்குகள் கிடைத்துள்ள நிலையில் மொத்த வாக்குகளில் 63.89 சதவீதமான வாக்குகளைப் பெற்றுள்ளார்.

வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான தகவல்

வாகனம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான தகவல்

புதிய அரசாங்கம்

இதேபோல மார்க்கம் பகுதியில் நீண்டகாலமாக வசிப்பவரும் சில வருடங்களுக்கு முன்னரே பொதுப் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் தமிழ் கனடிய பெண்மணி என்ற பதிவை பெற்றவருமான யுவனிதா நாதன், 14,000க்கு மேற்பட்ட வாக்குகளை பெற்று மொத்த வாக்குளில் 52 வீதம் பெற்றுள்ளார்.

கனடா நாடாளுமன்றத்தில் ஈழத்தமிழர்கள் - ஹரி மற்றும் யுவனிதா வெற்றி | Gary Anandasangaree Wins 2025 Canada Election

ப்ரோக் பல்கலைக்கழக பட்டதாரியான யுவனிதா நாதன் ஏற்கவே உள்ளுராட்சி உறுப்பினராக இருந்த நிலையில் தற்போது நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளார்.

புதிய அரசாங்கத்திலும் தற்போது நீதியமைச்சர் ஹரி ஆனந்தசங்கரிக்கு அந்த பொறுப்பு வழங்ககடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் புதிய அமைச்சரவையில் சிலவேளைகளில் யுவனிதா நாதனுக்கு ஒரு பொறுப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கபடுகிறது.

இந்த தேர்தலில் எதிர்க்கட்சியில் போட்டியிட்ட லயனல் லோகநாதன் மற்றும் நிரான் ஜெயநேசன் ஆகியோர் தமக்குரிய வெற்றிவாய்ப்புக்களை தவறிவிட்டாலும் அவர்களும் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயிர் அச்சுறுத்தல் உள்ளவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள் - விடுக்கப்பட்ட எச்சரிக்கை

உயிர் அச்சுறுத்தல் உள்ளவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள் - விடுக்கப்பட்ட எச்சரிக்கை



 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Wellawatte

15 Oct, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Bobigny, France

27 Sep, 2025
மரண அறிவித்தல்

Anaipanthy, கொழும்பு, Ilford, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, London, United Kingdom

10 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சூரியகட்டைக்காடு, நானாட்டான்

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Neuilly-Plaisance, France

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வவுனியா, கிளிநொச்சி, சென்னை, India

18 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Wembley, United Kingdom

18 Oct, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Toronto, Canada

14 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இன்பர்சிட்டி, London, United Kingdom

17 Oct, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், பேர்லின், Germany

26 Oct, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, கட்டைப்பிராய்

16 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மீசாலை மேற்கு, சாவகச்சேரி

14 Oct, 2025
30ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, சில்லாலை, எசன், Germany

15 Oct, 1995
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, காங்கேசன்துறை, Scarborough, Canada

16 Oct, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்

ஓட்டுமடம், Walthamstow, United Kingdom

09 Oct, 2025