தோட்ட தொழிலாளியின் வீட்டில் வெடித்தது சமையல் எரிவாயு கொள்கலன்
கொட்டகலை - பத்தனை பெய்திலி தோட்டத்தில் தோட்ட தொழிலாளியின் வீட்டில் வெடிப்பு சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
பத்தனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட வீட்டில் இன்று மாலை 6 மணியளவில் இருந்த சமையல் எரிவாயு கொள்கனில் பொருத்தப்பட்டிருந்த ரெகுலேட்டர் வெடித்துள்ளது.
தோட்ட தொழிலாளிகளான பெற்றோர்கள் தொழிலுக்கு சென்றிருந்த நிலையில் பாடசாலையில் இருந்து வீடு திரும்பிய பெண் பிள்ளை தண்ணீரை சூடாக்குவதற்கு சமையல் அறையில் இருந்த சமையல் எரிவாயு அடுப்பை பற்றவைத்து விட்டு வீட்டினுல் இருந்த பொழுது பாரிய சத்தத்துடன் சமையல் எரிவாயு அடுப்பு வெடித்துள்ளது.
எரிவாயு அடுப்பு வெடிப்பு மற்றும் தீப்பற்றல் காரணமாக எரிவாயு அடுப்பு முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் வீட்டின் மின் கட்டமைப்பு மற்றும் பொருட்களும் சேதமடைந்துள்ளன.
சமையலறையில் எவரும் இல்லாததன் காரணமாக எவருக்கும் ஆபத்துக்கள் ஏற்படவில்லை. கடந்த ஞாயிற்றுக்கிழமை கொள்வனவு செய்யப்பட்ட சமையல் எரிவாயு கொள்கலனே இவ்வாறு வெடித்துள்ளது.
குறித்த நேரத்தில் பெற்றோரும் வீடு திரும்பிய நிலையில் சமையல் எரிவாயு கொள்கலனை தந்தை தூக்கி வெளியில் வீசி எறிந்ததால் எற்படவிருந்த பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
அத்தோடு ஒன்றுகூடிய அயலவர்களும் பரவிய தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இவ்விடயம் சம்பந்தமாக குறித்த பகுதிக்கான கிராம உத்தியோகத்தருக்கும் திம்புள்ள - பத்தனை காவல் துறையினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த காவல் துறையனர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




