12 ஆயிரம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் எரிவாயு
Sri Lankan rupee
Litro Gas
Sri Lankan Peoples
Litro Gas Price
By Benat
சந்தையில் கொள்வனவு செய்வதற்கு போதிய எரிவாயு சிலிண்டர்கள் இல்லாவிட்டாலும் கறுப்புச் சந்தையில் அதிக விலைக்கு கொள்வனவு செய்வதற்கு எரிவாயு கிடைப்பதாக மாத்தறை பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
10,000 முதல் 12,000 ரூபாய் வரையிலான விலையில் எரிவாயு சிலிண்டர்கள் கொள்முதல் செய்யப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்.
இதனால் எரிவாயு முகவர்கள் கையிருப்பை மறைத்து இடைத்தரகர்கள் மூலம் அதிக விலைக்கு எரிவாயுவினை விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஏனையோர் சந்தையில் எரிவாயுவை கொள்வனவு செய்து மீண்டும் விற்பனை செய்து ரூபா 4000 முதல் 5000 வரை இலாபம் ஈட்டுவதாக மாத்தறை எரிவாயு பாவனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகள் உள்ளிட்ட பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென மாத்தறை மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்