எரிவாயு விநியோகம் தொடர்பில் வெளியான விசேட அறிவிப்பு!
லாஃப்ஸ் கேஸ் நிறுவனத்தின் அறிவிப்பு
அடுத்த ஆறு நாட்களில் உள்ளூர் சந்தைக்கு எரிவாயுவை வெளியிடுவதாக லாஃப்ஸ் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.
லாஃப்ஸ் கேஸ் நிறுவனத்தின் தலைவர் வெகபிட்டிய இதனை அறிவித்துள்ளார்.
லாஃப்ஸ் கேஸ் நிறுவனம் நீண்ட காலத்திற்கு எரிவாயு விநியோகத்தை இடைநிறுத்தியது. இது நுகர்வோரை கடுமையாக பாதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் அறிவிப்பு
இதேவேளை, இன்று இலங்கைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட 3500 மெட்ரிக் தொன் எரிவாயு ஏற்றுமதி மேலும் இரண்டு நாட்கள் தாமதமாகும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதனால் எரிவாயு விநியோகம் மேலும் இரண்டு நாட்கள் தாமதமாகும் என லிட்ரோ கேஸ் லங்கா தெரிவித்துள்ளது.
எரிவாயு விநியோகம் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், எரிவாயுவை கொள்வனவு செய்வதற்காக இன்று வரிசையில் நிற்க வேண்டாம் என அந்நிறுவனம் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. பாதித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, கடந்த மூன்று நாட்களாக லிட்ரோ நிறுவனம் தமது விநியோகத்தை இடைநிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான செய்தி
விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பு!