நட்சத்திர விடுதியில் குளிரூட்டிக்கான வாயு வெடிப்பு : ஒருவர் பலி
Srilanka
Kandy
Star hotel
Gas explosion
By Mkkamshan
நட்சத்திர விடுதியில் குளிரூட்டிக்கான வாயு (A/C GAS) வெடித்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கண்டி – இரண்டாவது ராஜசிங்க மாவத்தையிலுள்ள விடுதியில் இன்று குளிரூட்டிக்கான வாயு திருத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்த தருணத்தில், இந்த வெடிப்பு சம்பவம் நேர்ந்துள்ளது.
வெடிப்பு சம்பவத்தில் தீ காயங்களுக்கு உள்ளான இளைஞன், பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குளிரூட்டி வாயு திருத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையில், பழுதுபார்த்த பராமரிப்பு ஊழியர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கண்டி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி