வவுனியாவில் எரிவாயு அடுப்பு வெடித்துச் சிதறியது!! (படம்)
Vavuniya
Gas stove
explode
By Vanan
வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் வீடு ஒன்றில் சமைத்துக் கொண்டிருந்த போது எரிவாயு அடுப்பு வெடித்துள்ளதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (03) இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து குறித்த பெண்ணொருவர் எரிவாயு கொள்கலனை பாதுகாப்பாக அகற்றி மேலதிக அனர்த்தம் ஏற்படுவதை தவிர்த்துள்ளார்.
அத்துடன் குறித்த சம்பவம் தொடர்பில் வவுனியா காவல் நிலையத்தில் முறைப்பாடும் செய்துள்ளார்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற வவுனியா காவல்துறையினர் தடவியல் காவல்துறையினரின் உதவியுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
11ம் ஆண்டு நினைவஞ்சலி