சாணக்கவை வாங்க ஐ.பி.எல் அணிகளிடம் பணம் இருந்திருக்காது - சாணக்க தொடர்பில் கம்பீர் வெளியிட்ட கருத்து!
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான டி20 போட்டி நிறைவடைந்துள்ளது, இந்த தொடரை 2 -1 என இந்திய அணி கைப்பற்றியுள்ளது.
இந்த தொடர் முழுவதும் இலங்கை அணியின் தலைவரும் சகலதுறை வீரருமான தசுன் சாணக்க மிகச் சிறப்பாக பிரகாசித்துள்ளார்.
இந்தநிலையில், தசுன் சாணக்க தொடர்பில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தனது கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
தசுன் சாணக்க
ஐ.பி.எல் போட்டிகளுக்கான ஏலம் நடப்பதற்கு முன்னர் இந்த போட்டி நடந்திருந்தால் தசுன் சாணக்கவை வாங்குவதற்கு ஐ.பி.எல் அணிகளிடம் பணம் இருந்திருக்காது, அவர் மிகப்பெரிய தொகைக்கு ஏலம் போயிருப்பார் என கம்பீர் தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல் போட்டிகளுக்கான ஏலம் ஆரம்பிப்பதற்கு முன்பு சகலதுரை வீரர்களுக்கான தேவை அதிகமாக இருந்தது, அந்தவகையில் சாம் கர்ரன், கேமரூன் கிரீன் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் மிகப்பெரிய தொகைக்கு வாங்கப்பட்டனர், இருப்பினும் ஆச்சரியப்படும் விதமாக சாணக்கவை எந்த அணியும் வாங்கி இருக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.


ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்
