வெளியான பெறுபேறுகள்! அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்தோர் விபரம்
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்தோர் விபரங்களை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
2023ஆம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இன்று (31) வெளியாகியது.
இதனடிப்படையில்,பௌதீக விஞ்ஞானப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் ஆனந்தா கல்லூரியின் சிரத் நிரோத முதலிடம் பிடித்துள்ளார்.
முதலிடம் பிடித்த மாணவர்கள்
இதேவேளை, பொறியியல் தொழில்நுட்பப் பிரிவில் அகில இலங்கை ரீதியில் கினிகத்ஹேன மத்திய கல்லூரியின் செஹானி நவோத்யா முதலிடம் பிடித்துள்ளார்.
உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் காலி சங்கமித்தா மகளிர் கல்லூரியின் உபனி லெனோரா முதலிடம் பிடித்துள்ளார்.
2023ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சை கடந்த ஜனவரி மாதம் இடம்பெற்றிருந்தது.
அதில், 346,976 பரீட்சாத்திகள் நாடு முழுவதிலுமிருந்து தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |