முல்லைத்தீவு-வேணாவிலிருந்து சாதித்த மாணவிகள்! மகிழ்ச்சியில் கிராம மக்கள்
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு நகரை அண்டிய பகுதியில் உள்ள வறுமைக் கோட்டுக்குட்ப்பட்ட மக்கள் அதிகம் வாழ்ந்து வருகின்ற ஒரு கிராமமாக வேணாவில் கிராமம் காணப்படுகிறது.
பல்வேறு சவால்களுக்கு மத்தியில் தாங்களும் முன்னுக்கு வர வேண்டும் என்று போராடி வரும் குறித்த கிராமத்தில் கடின உழைப்பும் விடா முயற்சியும் இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்று நிரூபித்துள்ளதுடன் புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கும், மக்களுக்கும், வேணாவில் பாடசாலைக்கும் பெருமை தேடி தந்துள்ளதாக குறித்த மாணவர்களை கிராம மக்கள் பாராட்டி வருகின்றனர்.
குறித்த மாணவர்களுக்கு கிராம அமைப்புக்கள் பொதுமக்கள் என பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.
மகிழ்ச்சியில் கிராம மக்கள்
அந்தவகையில் நேற்று(31) வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தர பெறுபேறுகள் (2023) அடிப்படையில் கலைப் பிரிவில் தியாகராசா மோகனப்பிரியா 3A பெறுபேறுகளை பெற்று மாவட்ட மட்டத்தில் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
அதேவேளை தங்கவேல் கோபிதா 3A பெறுபேற்றை பெற்று மாவட்ட மட்டத்தில் 4 ஆவது இடத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.
அதேவேளை முத்துக்குமார் டிலைக்சனா 3A பெறுபேற்றை பெற்று மாவட்ட மட்டத்தில் 14 ஆவது இடத்தை பெற்றுக் கொண்டுள்ளார்.
இதேவேளை வணிகப்பிரிவில் பொன்னுத்துரை கம்ஷனா A, 2B பெறுபேற்றை பெற்று மாவட்டத்தில் 20 ஆவது இடத்தை பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |