வணிகவியலில் யாழ். இந்து மகளிர் மாணவி மாவட்ட நிலையில் முதலிடம்!
வெளியாகியுள்ள க.பொ.த உயர்தரப் பரீட்சையில் வணிகவியலில் யாழ். இந்து மகளிர் கல்லூரி மாணவி கிர்த்திகா பத்மலோஜன் யாழ். மாவட்டத்தில் முதல் நிலையைப் பெற்றிருக்கிறார்.
2023 ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றைய தினம்(31) வெளியாகியது.
யாழ். இந்து மகளிர் கல்லூரியில் இருந்து பரீட்சைக்குத் தோற்றியவர்களில் 90 மாணவிகள் விஞ்ஞான, கலை, வணிகவியல் துறைகளில் சிறப்புப் பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெற்றுருகின்றனர்.
மாவட்ட நிலையில் முதலிடம்
பரீட்சைக்குத் தோன்றிய மாணவர்கள் 284 பேரில் வணிகவியலில் முதலாம் நிலை மற்றும் கலைத் துறையில் ஐந்தாம் இடம் உட்பட 24 பேர் 3ஏ சித்திகளையும், 18 பேர் 2ஏ,பி சித்திகளையும், 6 பேர் 2ஏ, சீ சித்திகளையும் பெற்றுள்ளனர்.
மேலும், 2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கலைப்பிரிவில் வஜினா பாலகிருஷ்ணன் யாழ்.மாவட்ட ரீதியில் முதலாமிடத்தையும், நாடளாவிய ரீதியில் 32 இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |