யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் சிறந்த உயர்தர பெறுபேறுகள்
வெளியான கல்விப் பொதுத் தராதர உயர்தர தரப் பரீட்சை பெறுபேற்றின் அடிப்படையில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி (Jaffna Central College) விஞ்ஞான பிரிவை சேர்ந்த 3 மாணவர்கள் 3ஏ (3A) சித்திகளைப் பெற்றுள்ளனர்.
அதற்கமைய, உயிரியல் விஞ்ஞான பிரிவில் விநாயகச்செல்வன் ஆர்த்திகன் பௌதீக விஞ்ஞான பிரிவில் நாகராஜா ஹரீஷன் மற்றும் ஜெகதீபன் அஜய் ஆகியோர் 3ஏ (3A) சித்திகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
பௌதீக விஞ்ஞான பிரிவு
அத்துடன், உயிரியல் விஞ்ஞான பிரிவில் ராகவன் சேந்தன் 2ஏ பி (2A B) சித்தியையும் ஜெயக்குமாரன் சிந்துயன் பி 2சி (B 2C) சித்தியையும் ததீஸ்வரன் தஸ்வின் 3சி (3C) சித்தியையும் விஜயரஞ்சன் சாருஜன் சி 2எஸ் (C 2S) சித்தியையும் பெற்றுள்ளனர்.
மேலும், பௌதீக விஞ்ஞான பிரிவில் நகுலேஸ்வரன் நிருஷன் 2ஏ பி (2A B) சித்தியையும் நந்தகுமார் கபீசன் ஏ 2பி (A 2B) சித்தியையும் சிவதர்சன் சந்தோஷன் ஏபிசி (A B C) சித்தியையும் டியாஸ் டானியல் பி 2சி (B 2C) சித்தியையும் உதயராசா ஜீவதாஸ் பி 2எஸ் (B 2S) சித்தியையும் ஜெயராஜ் சண்முகப்பிரியன் 3சி (3C) சித்தியையும் லெமன் கோயேந்திரன் சந்தோஷ் சி 2எஸ் (C 2S) சித்தியையும் சத்தியதாஸ் டினிஸ்காந் சி 2எஸ் (C 2S) சித்தியையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள் |


ஈழத் தமிழரின் நீதிக்காய் போராடிய இறைவழிப் போராளி!
2 நாட்கள் முன்