இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வீரர்

India Indian Cricket Team Sports
By Raghav Jun 01, 2024 06:19 AM GMT
Report

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் கௌதம் கம்பீர் (Gautam Gambhir) நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் இந்திய வீரர் ராகுல் டிராவிட் (Rahul Dravid) செயல்பட்டு வருகிறார்.

வெளியான பெறுபேறுகள்! அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்தோர் விபரம்

வெளியான பெறுபேறுகள்! அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்தோர் விபரம்

தலைமை பயிற்சியாளருக்கான தேடல்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஒருநாள் உலகக் கிண்ணத்துடன் அவரது ஒப்பந்தம் முடிவடைந்தது. இருப்பினும், எதிர்வரும் ஜுன் முதலாம் திகதி ஆரம்பமாகவுள்ள T20 உலகக் கிண்ணத்தை கருத்தில் கொண்டு அவரது ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டது.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் | Bcci Gautam Gambhir Discuss India Coach

இந்த நிலையில், இந்திய ஆடவர் கிரிக்கெட் அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளருக்கான தேடலை ஆரம்பித்த இந்திய கிரிக்கெட் சபை (பிசிசிஐ) தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க கடந்த 13ஆம் திகதி அழைப்பு விடுத்தது.

இதற்கான காலம்  கடந்த மே 27 ஆம் திகதியுடன்  முடிவுற்றது. இதன்படி, இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு 3000-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக பிசிசிஐ செய்தி வெளியிட்டிருந்தது.

இதற்கிடையில், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க சென்னை சுப்பர் கிங்ஸ் (Chennai Super Kings) அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங்( Stephen Fleming) , டெல்லி கெபிடல்ஸ் (Delhi Capitals) அணியின் பயிற்சியாளர் ரிக்கி பொண்டிங்(Ricky Ponting) , லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ்(Lucknow Super Giants) அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லேங்கர்(Justin Langer) , குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans) அணியின் பயிற்சியாளர் ஆஷிஷ் நெஹ்ரா (Ashish Nehra) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்(Kolkata Knight Riders) அணியின் ஆலோசகர் கௌதம் கம்பீர் உள்ளிட்டோருடன் பிசிசிஐ பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக கூறப்பட்டது.

உயர்தர பரீட்சை பெறுபேறு: முல்லைத்தீவு மாவட்டத்தில் சாதனை படைத்த மாணவிகள்

உயர்தர பரீட்சை பெறுபேறு: முல்லைத்தீவு மாவட்டத்தில் சாதனை படைத்த மாணவிகள்

அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரருக்கு அழைப்பு

ஆனால், தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க, எந்தவொரு முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரருக்கும் அழைப்பு விடுக்கப்படவில்லை என்று பிசிசிஐ இன் செயலாளர் ஜெய் ஷா (Jay Shah) விளக்கம் அளித்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் | Bcci Gautam Gambhir Discuss India Coach

இதனால், வெளிநாட்டுப் பயிற்சியாளர்களை இந்திய அணி நிர்வாகம் விரும்பவில்லை என்று கூறப்பட்டது.

இதனிடையே, கௌதம் கம்பீரை இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கொண்டு வரும் திட்டத்தில் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா இருப்பதாக தகவல் வெளியாகியது. ஆனால், இதுதொடர்பாக கௌதம் கம்பீர் இதுவரை எந்தவொரு அறிவிப்பையும் வெளியிடவில்லை.

கூரை மீது ஏறி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர் : கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பரபரப்பு

கூரை மீது ஏறி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர் : கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பரபரப்பு


இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர்

இந்த நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்படுவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக விரைவில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிசிசிஐயின் மூத்த நிர்வாகிகளுக்கு மிகவும் நெருக்கமான ஒரு ஐபிஎல் அணியின் முக்கிய நிர்வாகி கிரிக்பஸ் இணையத்தளத்திற்கு அளித்துள்ள பேட்டியில், கௌதம் கம்பீரின் நியமனம் உறுதி செய்யப்பட்டு விட்டது என்றும் இது தொடர்பிலான அறிவிப்பு விரைவில் வரும் என்றும் கூறியுள்ளார்.

அண்மையில் நடைபெற்று முடிந்த 17ஆவது ஐபிஎல் T20 தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சம்பியன் பட்டத்தை வென்ற நிலையில், அந்த அணியின் வெற்றிக்கு ஆலோசகராக பணியாற்றிய கௌதம் கம்பீர் முக்கிய காரணமாக இருந்தார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக முன்னாள் வீரர் | Bcci Gautam Gambhir Discuss India Coach

கொல்கத்தா அணியின் ஆலோசகராக பதவியேற்ற முதல் ஆண்டிலேயே அவர் தனது அணிக்கு சம்பியன் பட்டத்தை முத்தமிட உதவினார்.

அவர் தலைமையிலான கொல்கத்தா அணி ஏற்கனவே 2012 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் ஐபிஎல் சம்பியன் பட்டம் வென்றது.

மேலும், கடந்த 2 ஆண்டுகளாக லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் ஆலோசகராக இருந்தபோது அந்த அணி பிளே–ஆப் சுற்றிற்கு நுழைந்தமை குறிப்பிடத்தக்கது.

அரசாங்கத்தில் இருந்து விலகும் மொட்டுக் கட்சி: ரணிலுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

அரசாங்கத்தில் இருந்து விலகும் மொட்டுக் கட்சி: ரணிலுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை

ஐ.எஸ். ஐ.எஸ் பயங்கரவாதிகளை வழிநடத்தியவர் கொழும்பில் கைது

ஐ.எஸ். ஐ.எஸ் பயங்கரவாதிகளை வழிநடத்தியவர் கொழும்பில் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

காரைநகர், மல்லாவி, இறம்பைக்குளம்

11 Jan, 2026
மரண அறிவித்தல்

வாதரவத்தை, நல்லூர், Scarborough, Canada

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, நியூ யோர்க், United States, Montreal, Canada, Toronto, Canada

02 Jan, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Mississauga, Canada

23 Dec, 2024
மரண அறிவித்தல்

உரும்பிராய், Tooting, United Kingdom, Coulsdon, United Kingdom

07 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Harrow, United Kingdom

08 Jan, 2026
மரண அறிவித்தல்

கொடிகாமம், மீசாலை வடக்கு, Benken, Switzerland

08 Jan, 2026
மரண அறிவித்தல்

மாதகல் கிழக்கு, London, United Kingdom

30 Dec, 2025
மரண அறிவித்தல்

இணுவில், New Malden, United Kingdom

04 Jan, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், London, United Kingdom

04 Jan, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Lünen, Germany

05 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி யோகபுரம், கொழும்பு, Kuala Lumpur, Malaysia, Toronto, Canada, அளவெட்டி

25 Dec, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், சேமமடு, Saint-Denis, France

08 Jan, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், நெல்லியடி, வெள்ளவத்தை

12 Jan, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு

10 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Markham, Canada

27 Dec, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, North York, Canada

19 Dec, 2019
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, கொழும்பு

10 Jan, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நல்லூர், Cheam, United Kingdom

28 Dec, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், Toronto, Canada

07 Jan, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்கன்குளம், பிரான்ஸ், France

09 Jan, 2020
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், இலங்கை, Toronto, Canada, Fairfield, United States, Rochester, United States, Annandale, United States

01 Jan, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், சுன்னாகம், London, United Kingdom

09 Jan, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி மேற்கு, டென்மார்க், Denmark, Milton Keynes, United Kingdom

10 Jan, 2021
22ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், தெஹிவளை

12 Jan, 2004
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், London, United Kingdom

06 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, அனலைதீவு 7ம் வட்டாரம், Neuss, Germany

09 Jan, 2022
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Zürich, Switzerland

06 Jan, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Klang, Malaysia, யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

08 Jan, 2022