சாதாரண தரப் பரீட்சை வினாத்தாள் முறைகேடு: பரீட்சை நிலையத்தின் பெண் மேற்பார்வையாளர் கைது
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் (GCE OL examination) ஆங்கில வினாத்தாளை வெளியிட்ட குற்றச்சாட்டில் பரீட்சை நிலையத்தின் பெண் மேற்பார்வையாளரொருவர் காவல்துறையினரால் கைது செய்யபட்டுள்ளார்.
க.பொ.த சாதாரணதரப் பரீட்சையின் ஆங்கில வினாத்தாளை வட்ஸ்அப் (WhatsApp) மூலம் வெளியிட்டதாக தெரிவித்தே காவல்துறையினரால் நேற்று (12) கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
கண்டியில் கைது
பரீட்சை இடம்பெறும் போது ஆங்கில (English) வினாத்தாளை புகைப்படம் எடுத்து ஹசலக்க பிரதேசத்தில் உள்ள தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவருக்கு அனுப்பி வைத்த சம்பவம் தொடர்பிலேயே அவர் கைதாகியுள்ளார்.
அந்த வினாத்தாளினை புகைப்படம் எடுத்து, வட்ஸ்அப் குழுக்களில் வெளியிட்ட சம்பவம் தொடர்பாக குறித்த தனியார் வகுப்பு ஆசிரியரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், தற்போது இடம்பெற்றுக்கொண்டிருக்கும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையில் அண்மையில் நடைபெற்ற விஞ்ஞான (Science) பாடத்திற்குரிய வினாத்தாள், ஒதுக்கீட்டுத் திட்டத்திற்குப் புறம்பாக தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |