நாடளாவிய ரீதியில் ஆரம்பமான சாதாரண தர பரீட்சை
2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை நாடளாவிய ரீதியில் இன்று (06) ஆரம்பமாகியுள்ளது.
குறித்த பரீட்சை இன்று முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இந்த நிலையில் குறித்த பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர (Amith Jayasundara) தெரிவித்திருந்தார்.
452,979 பரீட்சார்த்திகள்
நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 3,527 பரீட்சை நிலையங்களில் 452,979 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் எம்.ஜீவராணி புனிதா (Jeewarani Punida) குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் விசேட தேவையுடைய பரீட்சார்த்திகளுக்காக விசேட பரீட்சை நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
விசேட வேலைத்திட்டம்
இதேவேளை சாதாரண பரீட்சையை முன்னிட்டு விசேட வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் நிஹால் தல்துவ (Nihal Thalduwa) தெரிவித்துள்ளார்.
அதன்படி 2000 காவல்துறை உத்தியோகத்தர்கள் பாதுகாப்பு கடமைகளில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்.... |