மொனராகலை கல்வி வலயத்தில் வரலாற்று சாதனை படைத்த தமிழ் மாணவன்!
Sri Lanka
G.C.E. (O/L) Examination
By pavan
9A சித்தி
மொனராகலை மாவட்டத்தின் மொணராகலை கல்வி வலயத்தில் மாணவன் ஒருவர் 9A சித்திகளை பெற்று வரலாற்று சாதனை ஒன்றை படைத்துள்ளார்.
மொனராகலை விபுலானந்தா தேசிய பாடசாலையின் மாணவன் யோகேஸ்வரன் திவான் என்பவரே இந்த பெறுபேறுகளை பெற்றுள்ளார்.
நடந்து முடிந்த குறித்த க.பொ.த சாதாரண தரப்பரீட்சையில் மொனராகலை கல்வி வலயத்தில் வரலாற்றின் முதல் தடவையாக 9A சித்திகளை பெற்ற மாணவன் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

க.பொ.த சாதாரண தரப்பரீட்சை

நாடளாவிய ரீதியில் மே 23 முதல் ஜூன் 01 வரை 3,845 மையங்களில் நடைபெற்ற பரீட்சைக்கு 518,245 பரீட்சார்த்திகள் முகம்கொடுத்தனர்.
அவர்களில் 407,785 பாடசாலை மாணவர்கள் மற்றும் 110,460 தனியார் விண்ணப்பதாரர்கள் பங்குபற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி