பல்கலைக்கழக நுழைவு தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்
கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையை நிறைவு செய்த உடனேயே உயர்தர கல்வியை ஆரம்பிப்பதன் மூலம் பல்கலைக்கழகத்திற்கான நுழைவை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையை முன்னெடுப்பதன் மூலம் மாணவர்களின் நேரத்தை வீணடிப்பதை தடுக்க முடியுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை மதிப்பீடு செய்யும் நிகழ்வு இன்று (10) கல்வி அமைச்சில் சுசில் பிரேமஜயந்த தலைமையில் நடைபெற்றது.
பல்கலைக்கழக நுழைவு
இதன் போது உரையாற்றிய சுசில் பிரேமஜயந்த, “16 வயது முடிந்ததும் உயர்தர கல்வியும், 18 வயதை எட்டியவுடன் பாடசாலைக் கல்வியை முடித்து பல்கலைக்கழக நுழைவதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும்.
மாணவர்களின் நேரம் வீணடிக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை கல்வி அமைச்சு உடனடியாக முன்னெடுக்கும்.
அத்துடன், இதுவரை விடுபட்ட கற்கைகளை குறித்த மாணவர்கள் நிறைவு செய்வதது தொடர்பில் ஆராய்வதற்காக இரண்டு குழுக்கள் பல்கலைக்கழக அமைப்பில் நியமிக்கப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |