மண்சரிவில் சிக்கிய அம்மன் ஆலயத்தில் திடீரென பரவிய ஒளி : பிரதேசத்தில் பரபரப்பு
அண்மையில் டித்வா பேரிடரால் பாதிக்கப்பட்ட கண்டி மாவட்டம், கலஹா தெல்தொட்டை கள்ளந்தன்ன மேற்பிரிவில் உள்ள சிறி முத்துமாரி அம்மன் ஆலயத்தில் நேற்றைய தினம்(18) வித்தியாசமான ஒரு பிரகாசத்துடன் மிளிர்ந்த கற்பாறை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
இரவு நேரத்தில் பிரகாசமாக ஒளிர்ந்ததை கவனித்த இத்தோட்ட மக்கள் அருகில் சென்று பார்த்த போது, அது ஒரு இரத்தினக் கல்லாக இருக்கலாம் என்ற சந்தேகத்தை அவர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது .
சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர் விசாரணை
இந்த செய்தி கலஹா காவல் நிலையத்திற்கு உடனடியாக அறிவிக்கப்பட்டு, சம்பவ இடத்துக்கு சென்ற காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதேச மக்கள் இதனை “ஆலயத்தில் அதிசயமான நிகழ்வு” என ஆர்வமாக பார்வையிடட்டு வருகின்றனர். இந்த சம்பவம் இந்த பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

