நேபாளில் போராட்டத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு: அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு
நேபாளத்தில் (Nepal) போராட்டத்தில் உயிரிழப்புக்கு காரணமாக அமைந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தற்போதைய நேபாள பிரதமர் சுஷிலா கார்கி தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் அரசு ஊழல் செய்வதாக குற்றம்சாட்டி இளைஞர்கள் தலைமையிலான போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, இளைஞர்கள் பிரதமர் வீட்டை சூறையாடிய நிலையில், நாடாளுமன்றத்திற்கு தீ வைத்தனர்.
பதவி விலகல்
இதையடுத்து பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி பதவி விலகிய நிலையில், முன்னாள் தலைமை நீதிபதி ஷிலா கார்கி பிரதமராக பதவி ஏற்றுள்ளார்.
இந்தநிலையில் போராட்டத்தின் போது உயிரிழப்புக்கு காரணமாக இருந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போதைய அரசுக்கு அரசிலமைப்பு திருத்துவதற்கும் மற்றும் நிர்வாக அமைப்பு மாற்றுவதற்கும் அதிகாரம் கிடையாது.
கடும் நடவடிக்கை
ஊழலை முடிவுக்கு கொண்டு வரவும், சிறந்த நிர்வாகத்தை உறுதி செய்வதையும் மற்றும் மக்கள் எதிர்பார்க்கும் சேவையை மேம்படுத்தவும் உறுதி பூண்டுள்ளது.
போராட்டத்தின்போது உயிரிழப்பிற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அவர்கள் மாணவர்களாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் அத்தோடு, அடுத்த வருடம் மார்ச் ஐந்தாம் திகதி நாடாளுமன்ற தேர்தல் நடத்துவது தொடர்பான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது” என அவர் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
