இலங்கை போன்ற நாடுகளை கட்டுப்படுத்தவே ஜெனிவா மனித உரிமைகள் ஆணையம்
srilanka
war crimes
geneva human rights
By Sumithiran
சர்வதேச அரசியலில் இலங்கை போன்ற நாடுகளை கட்டுப்படுத்த நிறுவப்பட்ட அமைப்பாக ஜெனீவா மனித உரிமைகள் ஆணையம் புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்று உலகளாவிய இலங்கை மன்றம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சு புரிந்துணர்வுடன் செயற்பட வேண்டும் என்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மன்றத்தின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.
போர்க்குற்றங்கள் தொடர்பாக எமது நாட்டின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில், சர்வதேச நிபுணர்களின் அறிக்கைகள் அண்மைய காலங்களில் பயன்படுத்தப்படவில்லை என்று ஐக்கிய தேசிய அமைப்பின் ஊடக பேச்சாளர் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்துள்ளார்.