இன்று ஆரம்பமாகவுள்ள ஜெனிவா அமர்வு! லண்டனிலுள்ள ஸ்ரீலங்கா தூதரகத்தில் பறந்த கறுப்பு பலூன்கள்
London
United Nations
Human Rights
By Vasanth
ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வு தொடங்கும் நிலையில், லண்டனில் உள்ள ஸ்ரீலங்கா தூதரகத்தின் முன்னால் இன்று காலை ஸ்ரீலங்கா கொடிக்கு பதிலாக கறுப்பு பலூன்கள் பறக்கவிடப்பட்டுள்ளது.
இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் உயர் ஸ்தானிகராலயம் என பெயர் பொறிக்கப்பட்ட இடத்திலும் மற்றும் கட்டடத்தின் முன் பக்கத்திலும் இவ்வாறு பலூன்கள் தொங்கவிடப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்காவின் உத்தியோகபூர்வ 'So Sri Lanka' என்ற சுற்றுலா குறிச்சொல் வரியை கேலி செய்து, 'I'm Sri Lanka, I'm So Genocide, என்று பலூன்களில் அச்சிடப்பட்டு இவ்வாறு பறக்கவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

