இனப்படுகொலை குறித்த மக்கள் தீர்ப்பாயத்தின் தீர்ப்பினை ஆராயுமாறு அனந்தி கோரிக்கை

Sri Lankan Tamils Sri Lanka
By pavan Oct 07, 2023 10:41 AM GMT
Report

இலங்கையில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் நெதர்லாந்திலுள்ள மக்கள் தீர்ப்பாயம் வழங்கிய தீர்ப்பினை ஐ.நா மனித உரிமைகள் பேரவை ஆராய வேண்டுமென ஈழத்தமிழர் சுயாட்சி கழகத்தின் செயலாளரும் வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான ஆனந்தி சசிதரன் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களில் பூகோள அரசியல் தாக்கம் செலுத்துவதாக தீர்ப்பாயத்தின் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் நேற்று உரையாற்றிய போது ஆனந்தி சசிதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது, இலங்கையில் பல தசாப்தங்களாக தொடர்ந்து வரும் இனவாதம் மற்றும் பாகுபாடுகள் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக நாட்டின் கலாச்சாரம் மற்றும் கட்டமைப்பு ஆகியன பாதிக்கப்பட்டுள்ளதோடு உடல் ரீதியில் பலர் இனப்படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

"சாணக்கியன்,தொண்டமான் எமக்கு வேண்டாம்" காவல்துறையினரிடம் அட்டகாசம் புரியும் பௌத்த பிக்கு (காணொளி)

"சாணக்கியன்,தொண்டமான் எமக்கு வேண்டாம்" காவல்துறையினரிடம் அட்டகாசம் புரியும் பௌத்த பிக்கு (காணொளி)

சர்வதேச விசாரணை

இனப்படுகொலை தொடர்பில் சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென தமிழ் மக்கள் தொடர்ந்தும் கோரி வருகின்றனர்.

அவர்களது கோரிக்கையை முன்வைக்கும் முகமாக கடந்த 10 ஆண்டுகளாக, பாதிக்கப்பட்டவராக மற்றும் தெரிவு செய்யப்பட்ட மாகாண சபை உறுப்பினராக நான் இதில் பங்கு கொள்கிறேன்.

இனப்படுகொலை குறித்த மக்கள் தீர்ப்பாயத்தின் தீர்ப்பினை ஆராயுமாறு அனந்தி கோரிக்கை | Genocide In Sri Lanka

எனினும், பேரவை பொறுப்புக்கூரல் விடயத்தில் மாத்திரம் அதிக கவனம் செலுத்தியது. இனப்படுகொலைக்கு தீர்வு காண்பதன் முக்கிய அம்சமாகிய சர்வதேச விசாரணைக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படவில்லை.

சர்வதேச விசாரணையை தவிர்க்க முடியாத கட்டத்தில் ரணில் : சந்திரிக்கா திட்டவட்டம்

சர்வதேச விசாரணையை தவிர்க்க முடியாத கட்டத்தில் ரணில் : சந்திரிக்கா திட்டவட்டம்

தீர்ப்பை ஆராயுமாறு கோரிக்கை

இலங்கை தொடர்பில் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மேற்கத்திய நாடுகளால் தயாரிக்கப்பட்டவை. இனப்படுகொலைக்கான நீதி கிடைக்காமை குறித்து நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தால் கடந்த செப்டெம்பர் மாதம் வழங்கப்பட்ட தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களில் பூகோள அரசியல் கொண்டுள்ள தாக்கம் குறித்தும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இனப்படுகொலை குறித்த மக்கள் தீர்ப்பாயத்தின் தீர்ப்பினை ஆராயுமாறு அனந்தி கோரிக்கை | Genocide In Sri Lanka

நிரந்தர மக்கள் தீர்ப்பாயத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பை ஆராயுமாறு நான் பேரவையிடம் கோருகிறேன்.

இதனடிப்படையில், பேரவையின் தவறை அறிந்து அதனை சரி செய்ய தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு நான் கேட்டுக் கொள்கிறேன். என்றார். 

ReeCha
மரண அறிவித்தல்

மயிலிட்டி, கொழும்பு, Zürich, Switzerland

23 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, வெள்ளவத்தை

27 Feb, 2026
நன்றி நவிலல்

அளவெட்டி, கொக்குவில் மேற்கு, Montreal, Canada

25 Jan, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Saint-Denis, France

26 Jan, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Newmarket, Canada

29 Feb, 2016
31ம் நாள் அந்தியேட்டி அழைப்பிதழும் , 8ம் ஆண்டு நினைவஞ்சலியும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் தெற்கு, Northolt, United Kingdom

09 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், சரவணை, குருமன்காடு

23 Feb, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இராசாவின் தோட்டம், தெஹிவளை, கொக்குவில்

27 Feb, 2021
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, கந்தர்மடம், யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025