சிறிலங்காவில் மீண்டுமொரு இனப்படுகொலை? ஆட்சியாளர்கள் மீது கடும் குற்றச்சாட்டு
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நடந்தது எனக் கோரி போராட்டம் நடத்துபவர்கள் இயற்கையாக மரணிக்க வேண்டுனெ நினைக்கும் சிறிலங்கா ஆட்சியாளர்கள் இதன் ஊடாக மற்றுமொரு இனப்படுகொலையை புரிவதாக காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்துவரும் அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல் தெரிவித்துள்ளார்.
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டமைக்கான நேரடி சாட்சியாளர்களான, போராட்டக்காரர்களில் 90இற்கும் மேற்பட்டோர் போராட்டத்தின் போதே உயிரிழந்துள்ள நிலையில், அரசாங்கமோ சர்வதேசமோ எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளரான அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல்,
இந்த வார ஆரம்பத்தில் நினைவுகூறப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான சர்தேச தினத்தையொட்டி ஐபிசி தமிழுக்கு வழங்கிய விசேட செவ்வியில் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.