ட்ரம்பால் ஜெர்மனி எடுத்த அதிரடி முடிவு ...! அமெரிக்காவிடமிருந்து பறிபோகும் பெருமளவு தங்கம்
அமெரிக்காவிலுள்ள ஜெர்மனியின் தங்கத்தை மீண்டும் தாயகம் கொண்டு வர வேண்டும் என வலியுருத்தப்பட்டுள்ளது.
ஜெர்மன் நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சியான கிரீன் பார்ட்டி இதனை வலியுருத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் தெரியவருகையில், 3350 டன் என்ற அளவில் உலகிலேயே அதிக தங்க இருப்பு வைத்துள்ள நாடுகளில் ஜெர்மனி இரண்டாவது இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நெருக்கமான உறவு
இந்தநிலையில், 1945 ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு ஜெர்மனி அமெரிக்காவுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்தி கொண்டது.

இதன்போது, நம்பிக்கையை வெளிப்படுத்தும் விதமாக ஜெர்மனி தனது பெருமளவு தங்க இருப்பை அமெரிக்காவில் சேமித்து வைத்தது.
ஜெர்மனியின் தங்க இருப்பில் 37 சதவீதம் அதாவது 1,236 டன் தங்கமானது அமெரிக்காவின் நியூயார்க் பெடரல் ரிசர்வ் வங்கியில் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வரிவிதிப்பு நடவடிக்கைகள்
இந்தநிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடைய வரிவிதிப்பு நடவடிக்கைகள், கிரீன்லாந்தை இணைப்பதாக அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள், ஜெர்மனிக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், ஜெர்மன் நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சியான கிரீன் பார்ட்டி, பொருளாதாரத் தன்னிறைவு மற்றும் சர்வதேச மோதல்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளத் தங்கத்தை உடனடியாகத் தாயகம் கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.

அத்தோடு, ட்ரம்ப் எப்போது என்ன செய்வார் என்று தெரியாது எனவும் வருமானத்திற்காக அவர் எதையும் செய்வார் எனவும் சுட்டிகாட்டப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சர்வதேச பொருளாதார வட்டாரத்தில் இந்த விவகாரம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றைமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |