FIFA உலகக் கோப்பை: ஆரம்பத்திலேயே ஆதிக்கத்தை கையில் எடுத்த ஜெர்மனி - சுவீடன்

Japan Sweden FIFA World Cup Germany
By Dharu Jun 15, 2026 06:19 AM GMT
Report

ஐரோப்பிய வல்லமைமிக்க நாடான ஜெர்மனியின் சிறப்பான ஆட்டம், நெதர்லாந்துக்கும் ஜப்பானுக்கும் இடையிலான விறுவிறுப்பான சமநிலை, மற்றும் கோட் டிவார், ஸ்வீடன் அணிகளின் வெற்றிகள் ஆகியவை இந்த ஆண்டு நடைபெற்று வரும் உலகக்கிண்ண கால்ப்பந்து தொடரில் முக்கிய விடயங்களாக பார்க்கப்படுகின்றன.

குறிப்பாக இந்த தொடரில் மற்றுமொரு சிறப்பான போட்டி என்றால் மொரோக்கோ - பிரேசில்(BRZ 1 - MOR 1) இடையில் நடைபெற்ற போட்டியின் சமநிலை முடிவு.

இந்த ஆட்டங்கள் “நாக்அவுட்” சுற்றுக்கு தகுதி பெறும் அணிகள் மீதான எதிர்ப்பார்ப்புக்களை இப்போது தூண்டியுள்ளன.

தொடக்க ஆட்டத்தில் பராகுவேயை எளிதாக வீழ்த்திய அமெரிக்கா

தொடக்க ஆட்டத்தில் பராகுவேயை எளிதாக வீழ்த்திய அமெரிக்கா

2014 ஜெர்மனியின் ஆட்டம்

நான்கு முறை சாம்பியனான ஜெர்மனி, குராசோவை(Curacao) 7-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வீழ்த்தி, இத்தொடரின் விருப்பமான அணிகளில் ஒன்றாகத் தங்களை நிலைநிறுத்திக் கொண்டது.

FIFA உலகக் கோப்பை: ஆரம்பத்திலேயே ஆதிக்கத்தை கையில் எடுத்த ஜெர்மனி - சுவீடன் | Germany And Sweden Take Control Fifa Wc Japan Best

இறுதியில் ஆட்டத்தின் முடிவு ஜெர்மனியின் ஆதிக்கத்தை வெளிப்படுத்திய போதிலும், இந்தப் போட்டி கரீபியன் அணிக்கு ஒரு சிறிய நம்பிக்கையையும் வரலாற்றுத் தருணத்தையும் வழங்கியது.

இந்த ஆட்டம் 2014 ஆம் ஆண்டுக்கான உலகக்கிண்ண காலிறுதி போட்டியினை நினைவுப்படுத்தியது. இதில்  ஜெர்மனி அணி பிரேசில் அணியை 7 - 1 என்ற கணக்கில் வீழ்த்தியிருந்தது.

ஆறாவது நிமிடத்தில் ஃபெலிக்ஸ் நெமேச்சா மூலம் ஜெர்மனி முதலில் கோல் அடித்தது, ஆனால் 21வது நிமிடத்தில் லிவானோ கொமெனென்சியா சமன் செய்யும் கோலை அடித்ததால் குராசோ அணி சிறப்பாகப் பதிலளித்தது.

இந்த கோல், போட்டியின் பலவீனமான அணிகளுக்கு ஒரு மைல்கல் தருணமாக அமைந்தது. இது குராசோ அணிக்கு இப்போட்டியில் முதல் கோலைப் பெற்றுத் தந்ததுடன், இரு அணிகளும் சிறிது நேரம் சமநிலையில் இருந்தபோது அவர்களின் ஆதரவாளர்களிடையே பெரும் கொண்டாட்டங்களைத் தூண்டியது.

அதன் பின் ஜெர்மனி ஆட்டத்தின் முழு கட்டுப்பாட்டையும் தன் வசம் இழுத்துக்கொண்டது

38-வது நிமிடத்தில் நிக்கோ ஷ்லோட்டர்பெக் மீண்டும் முன்னிலை ஒரு கோலையும், முதல் பாதியின் கூடுதல் நேரத்தில் கை ஹாவர்ட்ஸ் பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றி, ஆட்டத்தின் கோல் கணக்கை 3-1 என மாற்றி அமைத்தனர்.

அதன்பிறகு, ஜெர்மனி வீரர்கள் ஆட்டத்தில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தினர். இரண்டாம் பாதியின் தொடக்கத்தில் ஜமால் முசியாலா கோல் அடிக்க, நத்தானியேல் பிரவுன் மற்றும் டெனிஸ் உண்டாவ் மேலும் கோல்களை அடித்து, வெற்றியின் முடிவை சந்தேகத்திற்கு இடமின்றி 7-1 என்ற வெற்றியை  உறுதி செய்தனர்.

சமநிலையில் முடிந்த கனடா - போஸ்னியா இடையேயான FIFA உலகக் கிண்ண போட்டி

சமநிலையில் முடிந்த கனடா - போஸ்னியா இடையேயான FIFA உலகக் கிண்ண போட்டி

கோட் டி ஐவோரி - ஈக்வடார்

அமெரிக்காவின் - பிலடெல்பியாவில் அரங்கில் நடைபெற்ற குரூப் E போட்டியில், மான்செஸ்டர் யுனைடெட் அணியின் விங்கர் அமாட் தியாலோ ஆட்டத்தின் இறுதியில் வெற்றி கோலை அடித்ததன் மூலம், கோட் டி'ஐவோர்(Côte d'Ivoire) அணி ஈக்வடார் அணியை 1-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

FIFA உலகக் கோப்பை: ஆரம்பத்திலேயே ஆதிக்கத்தை கையில் எடுத்த ஜெர்மனி - சுவீடன் | Germany And Sweden Take Control Fifa Wc Japan Best

ஆட்டத்தின் முதல் அரை மணி நேரத்தில் ஈக்வடார் அணி இரண்டு முறை கோல் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை தவர விட்டிருந்தது.

அதன் பிறகு கோட் டிவார் அணி படிப்படியாக ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. முதல் பாதியில் இரு அணிகளும் கோல்களை பெறவில்லை.

எனினும் இரண்டாம் பாதியின் கூடுதல் நேரத்தின் கடைசி நிமிடத்தில் மாற்று வீரரான தியாலோ தனது இடதுகால் ஷாட் மூலம் கோல் அடித்தார்.

இந்த முடிவு, 'E' பிரிவில் கோட் டிவாயருக்கு ஒரு சிறந்த தொடக்கத்தையும், நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறுவதற்கான பந்தயத்தில் ஆரம்ப உத்வேகத்தையும் பெற்றுக்கொடுத்துள்ளது.

96 ஆண்டுகால சாபத்தை முறியடித்து மெக்சிகோ படைத்த வரலாறு! தென்கொரியாவுக்கு முதல் வெற்றி

96 ஆண்டுகால சாபத்தை முறியடித்து மெக்சிகோ படைத்த வரலாறு! தென்கொரியாவுக்கு முதல் வெற்றி

நெதர்லாந்து 2 ஜப்பான் 2

அமெரிக்கா - டல்லாஸில் நடைபெற்ற, 'F' பிரிவின்  மற்றுமொரு  விறுவிறுப்பான தொடக்க ஆட்டத்தில், ஜப்பான் அணி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது.

FIFA உலகக் கோப்பை: ஆரம்பத்திலேயே ஆதிக்கத்தை கையில் எடுத்த ஜெர்மனி - சுவீடன் | Germany And Sweden Take Control Fifa Wc Japan Best

முதல் பாதியில் கோல்கள் அடிக்காத நிலையில் இரு அணிகளும் மீண்டு வந்து இரண்டாம் பாதியில் ஆட்டத்தை சம புள்ளியுடன் நிறைவு செய்தன.

சிறப்பான இந்த ஆட்டத்தில் இரு தரப்பினரும் தலா 10 முறை கோல் அடிக்க முயற்சித்த நிலையில், ஆட்டத்தின் இறுதியில் சாய்ச்சி கமடா தலையால் முட்டி அடித்த கோல் ஜப்பானுக்குத் தகுதியான ஒரு புள்ளியைப் பெற்றுத் தந்தது.

மேலும், நான்கு கோல்களும் இடைவேளைக்குப் பிறகே அடிக்கப்பட்டன. அனுபவமிக்க லிவர்பூல் தடுப்பாட்ட வீரர் வர்ஜில் வான் டைக், இடைவேளைக்குப் பிறகு தலையால் முட்டி கோல் அடித்து நெதர்லாந்தை முன்னிலைப்படுத்தினார்.

FIFA உலகக் கோப்பை: ஆரம்பத்திலேயே ஆதிக்கத்தை கையில் எடுத்த ஜெர்மனி - சுவீடன் | Germany And Sweden Take Control Fifa Wc Japan Best

ஆறு நிமிடங்கள் கழித்து, கெய்ட்டோ நகமுரா பெனால்டி பாக்ஸிற்கு வெளியே இருந்து ஒரு அற்புதமான கோல் அடித்து ஆட்டத்தைச் சமன் செய்தார்.

கிரிசென்சியோ சம்மர்வில் கோல் அடித்து நெதர்லாந்தை மீண்டும் முன்னிலைப்படுத்தினார். ஆட்டம் முடிய ஒரு நிமிடம் இருந்தபோது ஜப்பானின் கமடா கோல் அடித்து, ஆட்டத்தைச் சமன் செய்தார்.  

கால்பந்து உலகக் கோப்பை நாயகனாக உருவெடுக்கும் சீனாவின் கார்டு மாஸ்டர்!

கால்பந்து உலகக் கோப்பை நாயகனாக உருவெடுக்கும் சீனாவின் கார்டு மாஸ்டர்!

ஸ்வீடன் 5 துனிசியா 1

அமெரிக்கா - மான்டேரியில் நடந்த போட்டியில், யாசின் அயாரியின் இரண்டு அற்புதமான கோல்களால் அந்த மைதானத்தை ஸ்வீடன் அணி ஒளிரச் செய்து, துனிசியாவை 5-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி  வெற்றி பெற்றது.

FIFA உலகக் கோப்பை: ஆரம்பத்திலேயே ஆதிக்கத்தை கையில் எடுத்த ஜெர்மனி - சுவீடன் | Germany And Sweden Take Control Fifa Wc Japan Best

வடக்கு அமெரிக்காவுக்கான உலக்கிண்ண அணிகளின் தகுதியை உறுதி செய்வதற்காக போலந்தை பிளேஆஃப் சுற்றில் ஸ்வீடன் வீழ்த்தியது.

அதனைத் தொடர்ந்து, துனிசிய கோல்கீப்பர் தடுத்திருக்க வேண்டிய மற்றொரு நீண்ட தூர ஷாட் மூலம் அலெக்சாண்டர் இசாக் முன்னிலையை இரட்டிப்பாக்கினார்.

இடைவேளைக்குச் சற்று முன்பு, ஓமர் ரெகிக் தலையால் முட்டி அடித்த பந்து கோலாக மாறியபோது, ​​இதன்போது வடக்கு ஆப்பிரிக்கர்களுக்கு ஒரு நம்பிக்கை துளிர்விட்டது.

இரண்டாம் பாதி தொடங்கி கால் மணி நேரத்தில், துனிசியாவின் தடுப்பாட்டத் தவறைப் பயன்படுத்திக்கொண்ட இசாக், அர்செனல் வீரர் விக்டர் கியோகெரெஸுக்கு பந்தை அனுப்ப, அவர் எந்தத் தவறும் செய்யாமல் நிதானமாக அதை கோலாக மாற்றி, ஸ்வீடன் தனது இரண்டு கோல்கள் முன்னிலையை மீண்டும் நிலைநாட்டியது.

இதன்படி மாற்று வீரரான மத்தியாஸ் ஸ்வான்பெர்க், களத்திற்கு வந்த 18 வினாடிகளில் ஸ்வீடனுக்காக நான்காவது கோலை அடித்தார். அதனைத் தொடர்ந்து, அயாரி தனது அற்புதமான இரண்டாவது கோலை அடித்து, ஸ்வீடனின் ஆதிக்கத்தை முழுமையாக்கினார்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

நெல்லியடி, Manippay, Kaduna, Nigeria, Toronto, Canada

11 Jun, 2026
நன்றி நவிலல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, Oshawa, Canada

13 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
மரண அறிவித்தல்

களுவாஞ்சிக்குடி, Argenteuil, France

14 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
நன்றி நவிலல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, மும்பை, India, சென்னை, India, Markham, Canada

14 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு கொம்பனித்தெரு

17 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
மரண அறிவித்தல்

Ipoh, Malaysia, நாவற்குழி, New Malden, United Kingdom

06 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நாவாந்துறை, Oberhausen, Germany

15 Jun, 2021
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Vaddukoddai, Reggio Emilia, Italy, Slough, United Kingdom

07 Jun, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி, Toronto, Canada

12 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி யோகபுரம், Bobigny, France

30 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026