மீண்டும் எல்லைக் கட்டுப்பாடுகளை நீட்டிக்க முடிவு செய்துள்ள ஜேர்மனி!
செக் குடியரசு, போலந்து மற்றும் சுவிட்சர்லாந்துடனான எல்லைக் கட்டுப்பாடுகளை டிசம்பர் நடுப்பகுதி வரை நீட்டிக்க ஜேர்மனி முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
10 நாட்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், ஒக்டோபர் மாத இறுதிவரை 20 நாட்களுக்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டிருந்தது.
அதன் பின்னர் எல்லைக் கட்டுப்பாடுகள் நவம்பரில் மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஜேர்மனி அறிவித்திருந்ததோடு,ஒழுங்கற்ற புலம்பெயர்தலையும், ஆட்கடத்தலையும் கட்டுப்படுத்துவதற்காக, எல்லைக்கட்டுப்பாடுகளை ஜேர்மனி பயன்படுத்திக்கொள்ள விரும்புவதாக ஜேர்மனி வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஜெர்மனியின் எல்லை சோதனை
மேலும் 2015 முதல் சக ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடான ஆஸ்திரியாவின் எல்லையில் ஜெர்மனி எல்லை சோதனைகளை மேற்கொண்டது.
ஒக்டோபரில் நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து சுமார் 9,200 அங்கீகரிக்கப்படாத உள்ளீடுகள் கண்டறியப்பட்டதாகவும் மேலும் 4,370 தடுக்கப்பட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |