ஜெர்மனி, பெல்ஜியத்தில் வெள்ளப்பெருக்கு - உயிரிழப்பு 157 ஆக உயர்வு - நூற்றுக் கணக்கானோர் மாயம்
death
germany
flood
lunch news
belgium
By Vanan
ஜெர்மனி, பெல்ஜியத்தில் வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 157 ஆக உயர்வடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
ஜெர்மனியின் மேற்கு பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், வெள்ளப்பெருக்கில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 157 ஆக உயர்ந்துள்ளது.
ஜெர்மனியில் 133 பேரும், பெல்ஜியத்தில் 24 பேரும் இறந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பலரை காணவில்லை என்பதால், உயிரிழப்பு மேலும் உயரலாம் என அஞ்சப்படுகிறது.
இதேபோல் நெதர்லாந்திலும் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், லிம்பர்க் மாகாணத்தின் பல்வேறு பகுதிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதன் விரிவான மற்றும் பல தகவல்களுடன் வருகிறது மதியநேர செய்திகளின் தொகுப்பு,
1ம் ஆண்டு நினைவஞ்சலி