பிரித்தானியர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர அறிவிப்பு!
ஜேர்மனியை தளமாக கொண்ட முல்லர் நிறுவனம் கேட்பரி நிறுவனத்தின் இனிப்பு வகைகள் சேர்த்து தயாரிக்கப்படும் விருந்துக்குப் பின்னரான இனிப்பு வகைகளில் ஆறு ரகங்களை பிரித்தானிய சந்தையில் இருந்து அவசரமா மீளெடுப்பதான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
லிஸ்டீரியா எனப்படும் பக்ரீறியா தொற்று அபாயம் காரணமாக இந்த நகர்வு எடுக்கபட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிறார்களிடம் பிரபலமான ஹீரோஸ் மற்றும் டெய்ரி மில்க் பட்டன்கள் உட்பட ஆறு கட்பரி இனிப்பு வகைகள், லிஸ்டீரியாதொற்று சாத்தியங்கள் காரணமாக மீளெடுக்கப்படுவதாக முல்லர் நிறுவனம் அறிவித்துள்ளது.
இனிப்பில் பக்ரீறியாத் தாக்கம்
லிஸ்டீரியோசிஸ் என்ற பக்ரீறியாத்தாக்கம் குளிர்ந்த உணவுகளில் உருவாக கூடியது. தற்போது இவ்வாறான தொற்றின் சாத்தியப்பாடுகள் Cadbury Daim Cadbury Crunchie, கட்பரி ஃப்ளேக் , Cadbury Dairy Milk பட்டன்ஸ் , கட்பரி டெய்ரி மில்க் சங்க்ஸ், கட்பரி ஹீரோஸ் ஆகிய சொக்லேற் மற்றும் இனிப்பு தயாரிப்புகள் அடங்கிய டெசேற்ஸ் எனப்படும் விருந்துக்குப் பின்னரான இனிப்பு வகைகளில் உள்ளதான அச்சத்தால் இந்த தயாரிப்புகள் மீளெடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்த இனிப்பு வகைகளை கொள்வனவு செய்திருந்தால் அவற்றை உட்கொள்ளாமல் மீண்டும் கொள்வனவு செய்த கடைகளிடம் கையளிக்குமாறும் முல்லர் நிறுவனம் அறிவித்துள்ளது.
