இந்திய அணியை ஆபாரமான வெற்றிக்கு அழைத்து சென்ற கில்லின் இரட்டைசத சாதனை

West Indies cricket team Indian Cricket Team Shubman Gill
By Dharu Oct 01, 2026 12:25 AM GMT
Report

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 2ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணித்தலைவர் சுப்மன் கில் அபாரமாக விளையாடி 223 ஓட்டங்களை குவித்து, இந்திய அணியை 8 விக்கெட்டுகளால் வெற்றிபெறச் செய்துள்ளார்.

405 ஓட்டங்கள் என்ற பிரமாண்ட இலக்கை துரத்திய இந்திய அணிக்காக கில் ஆட்டமிழக்காமல் 223 ஓட்டங்களை விளாசினார்.

இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது அதிகபட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கையை கில்பதிவு செய்தார்.

விராட் கோலி படைத்த புதிய உலக சாதனை

விராட் கோலி படைத்த புதிய உலக சாதனை

அதிகபட்ச ஓட்ட இலக்கு 

இந்தப் போட்டியில் இரட்டை சதம் அடித்ததன் மூலம், ஒருநாள் கிரிக்கெட்டில் ஒன்றுக்கும் மேற்பட்ட இரட்டை சதங்களை பதிவு செய்த வீரர்கள் பட்டியலில் ரோஹித் சர்மாவுக்கு அடுத்த 2ஆவது வீரர் என்ற சாதனையை கில் படைத்துள்ளார்.

இந்திய அணியை ஆபாரமான வெற்றிக்கு அழைத்து சென்ற கில்லின் இரட்டைசத சாதனை | Gill Doublecentury Led Indian Team Huge Victory

மேலும், வெறும் 117 பந்துகளில் இரட்டை சதத்தை எட்டிய கில், ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக இரட்டை சதம் அடித்த வீரர் என்ற புதிய சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

223 ஓட்டங்களுடன், ஒருநாள் போட்டிகளில் ஒரு அணித்தலைவர் பதிவு செய்த அதிகபட்ச தனிநபர் ஓட்ட எண்ணிக்கையையும் கில் பதிவு செய்தார்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி, ஒருநாள் போட்டிகளில் தனது அதிகபட்ச ஓட்ட இலக்கை வெற்றிகரமாகத் துரத்தியது.

மேலும், 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்தியா 2-0 என கைப்பற்றியது.

405 ஓட்டங்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய கில் மற்றும் ரோஹித் சர்மா ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடினர்.

புதிய தலைமைப் பயிற்சியாளரை அறிவித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

புதிய தலைமைப் பயிற்சியாளரை அறிவித்தது சென்னை சூப்பர் கிங்ஸ்

அதிரடி காட்டிய மேற்கிந்திய தீவுகள்

ஆரம்பத்தில் கில் சற்று நிதானமாக விளையாடிய போதிலும், பின்னர் அதிரடியாக ஆடி தனது 11ஆவது ஒருநாள் சதத்தை பதிவு செய்தார்.

இந்திய அணியை ஆபாரமான வெற்றிக்கு அழைத்து சென்ற கில்லின் இரட்டைசத சாதனை | Gill Doublecentury Led Indian Team Huge Victory

தொடர்ந்து ரோஹித் சர்மாவும் சதம் விளாசினார். இது ஒருநாள் போட்டிகளில் அவரது 35ஆவது சதமாகும். இந்த ஆட்டத்தில் ரோஹித் 101 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அவருக்குப் பின்னர் களமிறங்கிய விராட் கோலி 29 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ருதுராஜ் கெய்க்வாட் இணைந்த நிலையில், கில் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

இந்திய அணியை ஆபாரமான வெற்றிக்கு அழைத்து சென்ற கில்லின் இரட்டைசத சாதனை | Gill Doublecentury Led Indian Team Huge Victory

முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 405 ஓட்டங்களை குவித்தது.

ஜான் காம்பெல் 68 பந்துகளில் 101 ஓட்டங்களை விளாசினார். அணித்தலைவர் ஷாய் ஹோப் 94 பந்துகளில் 104 ஓட்டங்களையும், அமீர் ஜாங்கூ 77 பந்துகளில் 114 ஓட்டங்களையும் குவித்தனர்.

இதன் மூலம் மேற்கிந்திய தீவுகள் ஒருநாள் கிரிக்கெட்டில் தனது அதிகபட்ச அணித்தொகை ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்தது.

எனினும், கில்லின் அபாரமான இரட்டை சதத்தின் மூலம் இந்தியா வெற்றி இலக்கை எட்டியது.

  செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, கொழும்பு, பாண்டியன்குளம், Brampton, Canada

26 Sep, 2026
மரண அறிவித்தல்

திருகோணமலை, கிளிநொச்சி, Vitry-sur-Seine, France

31 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
12ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

01 Oct, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய் கிழக்கு, Hayes, United Kingdom

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காலி, கொழும்பு, திருகோணமலை, Dagenham, United Kingdom

29 Sep, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி
40ம் ஆண்டு நினைவஞ்சலி

கொற்றாவத்தை, கீரிமலை

28 Sep, 1986
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

28 Sep, 2011
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Aurora, Canada

29 Sep, 2021
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Southampton, United Kingdom

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பேராதனை

27 Sep, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

11 Oct, 2019