இஞ்சியின் விலையில் சடுதியாக ஏற்பட்டுள்ள வீழ்ச்சி: விவசாயிகள் கவலை
Sri Lanka Economic Crisis
Sri Lanka
Economy of Sri Lanka
By Aadhithya
உள்ளூர் சந்தையில் இஞ்சியின் விலை வேகமாக வீழ்ச்சியடைந்துள்ளதால், தாம் கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளதாக விவசாயிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இஞ்சி இறக்குமதி செய்ய பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு (Ministry of Agriculture) தீர்மானித்தமையே இதற்கு காரணம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அமைச்சரவை அனுமதி
அந்தவகையில், கடந்த காலத்தில் சந்தையில் 3000 ரூபாவாக உயர்ந்து காணப்பட்ட ஒரு கிலோகிராம் இஞ்சி தற்போது 1000 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.
எவ்வாறாயினும், விலையை கட்டுப்படுத்தும் வகையில் 3000 மெற்றிக் தொன் இஞ்சியை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்