5000 ரூபாய் கேட்டு கூரிய ஆயுதத்துடன் வந்த பெண்ணால் பரபரப்பு
arrest
corona
police
money
galle
By Shalini
காலி - ஹுங்கம பகுதியில் 5000 ரூபா நிவாரண கொடுப்பனவை பெறுவதற்காக பெண் ஒருவர் கூரிய ஆயுதம் ஒன்றுடன் வருகைத்தந்துள்ளார்.
இதையடுத்து பணம் பெற வந்திருந்தவர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அத்துடன் அதிகாரிகளின் சேவைக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றத்திற்காக அவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்காளர் பட்டியலில் பெயரிடப்பட்டவர்களுக்கு மட்டுமே 5000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், வாக்காளர் பட்டியலில் தனது பெயரையும் இணைத்துக்கொள்ளுமாறு குறித்த பெண் கூரிய ஆயுதத்துடன் வருகை தந்து அதிகாரிகளை அச்சுறுத்தியுள்ளார்.
சம்பவம் தொடர்பில் ஹுங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்