கல்கிஸை பிரதேசத்தில் இடம்பெற்ற அநாகரிக செயற்பாடு -07 பெண்கள் கைது
arrest
police
colombo
woman
galkissa
By Sumithiran
கல்கிஸை பிரதேசத்தில் இடம்பெற்ற அநாகரிக செயற்பாட்டில் ஈடுபட்டனர் என்ற சந்தேகத்தின்பேரில் 07 பெண்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
காவல்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது தசைப்பிடிப்பு நிலையம் என்ற போர்வையில் செயற்பட்டு வந்த விபசார விடுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதன்போது 20 – 48 வயதுக்கிடைப்பட்ட மொரட்டுவை, இரத்மலானை, பொல்கசோவிட, யட்டியந்தோட்டை மற்றும் பொரலந்த ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனா்.
இதுதொடர்பான மேலதிக விசாரணைகள்காவல்துறைனியரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.