பத்து வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூரம் -ஆசிரியர் கைது
Sexual harassment
Sri Lanka Police Investigation
Child Abuse
By Sumithiran
பத்து வயதான பச்சிளம் மாணவியான சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாக தெரிவித்து பாடசாலை ஆசிரியர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
எஹலியகொட பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்பிக்கும் 46 வயதான ஆசிரியரே கைது செய்யப்பட்டுள்ளதாக எஹலியகொட காவல்துறையினர் தெரிவித்தனர்.
சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த தகவல்
சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையிலேயே சந்தேகத்தின் பேரில் ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
மேலதிக விசாரணை
பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சிறுமியிடம் வாக்குமூலம் பெறப்பட்டதன் பின்னர், வைத்திய பரிசோதனைக்காக வைத்தியசாலையில் சிறுமி அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி