குளியலறை தண்ணீர் தொட்டியில் வீழ்ந்து 11 வயது சிறுமி உயிரிழப்பு : மட்டக்களப்பில் துயரம்
ஏறாவூர் காவல்துறை பிரிவிலுள்ள நீதிமன்ற வீதியில் உள்ள வீடு ஒன்றின் குளியலறையில் உள்ள தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து 11வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை (28) மாலையில் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஏறாவூர் 5 பிரிவு நீதிமன்ற வீதியைச் சேர்ந்த சத்யானந்தன் சதிஷா,என்ற சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.
குறித்த சிறுமியின் தாயார் வேலைவாய்ப்புக்காக வெளிநாடு சென்றிருந்த நிலையில் தந்தையாருடன் வசித்து வந்துள்ளார்.
குளியலறை தண்ணீர் தொட்டிக்குள் கிடந்த சிறுமி
நேற்று மாலை சிறுமியும் அவரது சகோதரனும் மட்டுமே தனியாக இருந்து வந்துள்ள நிலையில், தந்தையார் வெளியில் இருந்து வீட்டுக்கு சென்றபோது குளியலறையில் சுமார் இரண்டரை அடி உயரமுள்ள ஒரு தொட்டியில் சிறுமி கிடப்பதை அவதானித்துள்ளார்.

இந்நிலையில் தந்தையார் சிறுமியை மீட்டு ஏறாவூர் வைத்தியசாலைக்கு கொண்டுசென்று அனுமதிக்கப்பட்டபோது சிறுமி ஏற்கனவே உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து சடலம் பிரேத பரிசோதனைக்காக பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நாட்டு நடப்பு 300 வது Episode சிறப்பு நேரலை