இலக்கு வைக்கப்படும் ஈரானின் தெற்கு துறைமுகங்கள்! கடற்படை முற்றுகையை வலுப்படுத்தியுள்ள அமெரிக்கா
இரு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் இராணுவ மோதலுக்கு மத்தியில், அமெரிக்கா ஈரானின் தெற்குத் துறைமுகங்கள் மீதான தனது கடற்படை முற்றுகையை வலுப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டிற்காக சமீபத்தில் மீண்டும் இராணுவத் தாக்குதல்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக வழங்கப்பட்ட எண்ணெய் மற்றும் வங்கி விலக்குகளை அமெரிக்கா இரத்து செய்ததுடன், ஈரானுடன் தொடர்புடைய கப்பல்கள் மேலும் ஈரானிய எண்ணெயை ஏற்றுவதற்காகத் துறைமுகத்திற்குத் திரும்புவதையும் தடுத்த நிலையில் மோதலின் நிலை தீவிரமடைந்திருந்தது.
புரிந்துணர்வு ஒப்பந்தம்
சமீபத்திய தாக்குதல்களால் புரிந்துணர்வு ஒப்பந்தம் செயலிழந்ததால், அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) ஹோர்முஸ் நீரிணையில் இயங்கி வந்த பல கப்பல்களை வேறு திசைக்குத் திருப்பிவிட்டது.

மேலும், போரின் போது ஈரானிய கச்சா எண்ணெயை ஏற்றிச் சென்றதாகக் கூறப்பட்ட, குராசோ கொடியை ஏந்திய பெல்மா என்ற சூப்பர்டேங்கர் கப்பலைச் செயலிழக்கச் செய்வதற்காகவும் அமெரிக்கா தாக்குதலை மேற்கொண்டது.
அமெரிக்க தற்போதைய புதிய முற்றுகையின் காரணமாக, ஈரானின் தினசரி எண்ணெய் ஏற்றுமதியில் குறைந்தது 1.5 மில்லியன் பீப்பாய்கள் சந்தையிலிருந்து நீக்கப்படும் என்று எரிசக்தி ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
இது எண்ணெய் விலையை ஒரு பீப்பாய்க்கு சுமார் 90 டொலர் வரை உயர்த்தியுள்ளதுடன், நீடித்த மோதல் மேலும் விலை உயர்வுகளுக்கு வழிவகுக்கக்கூடும் எனவும் தெரிவித்துள்ளனர்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்… 15 மணி நேரம் முன்