விபத்தில் சிக்கி பலியான எட்டு வயது சிறுமி: தாய் - சகோதரர் வைத்தியசாலையில் அனுமதி!
ராகம - வல்பொல வீதியில் வல்பொல தொடருந்து நிலையத்திற்கு அருகே கட்டுப்பாட்டை இழந்த லொரி ஒன்று விபத்திற்குள்ளாகியுள்ளது.
விபத்தில் எட்டு வயதுச் சிறுமி உயிரிழந்துள்ளதுடன் அவரது தாயாரும் சகோதரனும் படுகாயமடைந்துள்ளனர்.
படுகாயமடைந்த இருவரும் ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ராகமவில் இருந்து வல்பொல திசையை நோக்கிப் பயணித்த லொரி ஒன்று, சாரதியால் வாகனத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதால் எதிரே வந்த கார் மற்றும் பிறிதொரு லொரியின் மீது மோதியுள்ளது.
அத்துடன் வீதியின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்த தாய் மற்றும் அவரது இரு பிள்ளைகள் மீதும் குறித்த லொரி மோதி நின்றுள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த இரு பிள்ளைகளும் தாயாரும் உடனடியாக ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி எட்டு வயதுச் சிறுமி உயிரிழந்துள்ளார்.
விபத்துடன் தொடர்புடைய லொரியின் சாரதி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து ராகம காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 7