சிறுமியின் மரணம் - களத்தில் இறங்கியது பொலிஸ் -ரிஷாட் பதியுதீனிடமும் விசாரணை
மர்மமான முறையில் தீ க்காயங்குள்ளானமை மற்றும் நீண்ட காலமாக பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாகக் கூறப்படும் சிறுமியின் மரணம் தொடர்பில் அடுத்த சில நாட்களில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனிடம் விசாரணை நடத்தவுள்ளதாக பொரளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் நீதிமன்றின் அனுமதியை பெறும் நடவடிக்கையிலும் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
உயிர்த்தஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பாக சிஐடியால் கைது செய்யப்பட்ட ரிஷாத் பதியுதீன், தற்போது தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
முடிந்தால் முன்னாள் அமைச்சரை மருத்துவமனையில் விசாரிக்கவுள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
இதற்கிடையில், இரண்டு சிறப்பு பொலிஸ் குழுக்கள் சிறுமியின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அயலவர்களிடமிருந்து தகவல்களைப் பெறுவதற்காக சிறுமி வசித்து வந்த ஹட்டன் டயகம பகுதிக்குச் சென்றுள்ளன.
இதேவேளை ரிஷாத் பதியுதீன் வீட்டில் பணிபுரிந்த இளைஞரின் மொபைல் போன் சிஐடியிடம் விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.