மஹிந்தவின் கோட்டைக்கு Pfizer தடுப்பூசி எப்படி கிடைத்தது? இரகசியம் உள்ளதாக சர்ச்சையை கிளப்பும் தேரர்
மஹிந்தவின் கோட்டை என அழைக்கப்படும் ஹம்பாந்தோட்டை பகுதிக்கு ஃபைசர் கோவிட் தடுப்பூசி விநியோகிப்பது ஒரு சதி என்று நாரஹேன்பிட்டி அபயராம தலைமை அறங்காவலர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்று கருத்து வெளியிட்ட போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
உண்மையில், யாரோ ஒருவர் வேண்டுமென்றே ஜனாதிபதி மற்றும் நாமல் ராஜபக்ஸவுக்கு புள்ளிகளைப் பெற்றுக்கொடுக்க முயல்கின்றனர். எனினும் பிரதமருக்கான புள்ளிகளைப் பெற வேலை செய்யவில்லை என்றும் குறிப்பிட்டார்.
ஹம்பாந்தோட்டையில் மட்டும் இல்லை. தற்போது அனைவருமே பாதிக்கப்படும் போது அங்கு மட்டும் ஃபைசர் சென்றது எப்படி?
அவர்கள் அங்கு ஒரு விமான நிலையம் இருப்பதாக சொல்கிறார்கள். அப்படி என்றால் கொழும்பிலும் விமான நிலையம் உள்ளது.
கொழும்பைக் கடந்து சென்றது எப்படி? கொழும்பை சீனாவுக்குக் கொடுத்த பிறகு ஹம்பாந்தோட்டைக்கு ஃபைசர் ஏன் கொடுக்க வேண்டும்? என அவர் கேள்வி எழுப்பினார்.
இதன் பின்னணியில் ஒரு இரகசியம் அல்லது சதி இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது என்றும் அவர் கூறினார்.