உலகளாவிய மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகள் IBC தமிழில் நேரலையாக
By Pavi
உலகெங்கும் வாழும் ஈழத்தமிழ் மக்களால் நினைவுகூரப்படும் மாவீரர் தின நிகழ்வுகள், தமிழர் தாயகம் உள்ளிட்ட புலம்பெயர் நாடுகள் முழுவதும் நடைபெறவுள்ளன.
இதன்படி மாவீரர் தினத்தை முன்னிட்டு, எதிர்வரும் 27 ஆம் திகதி உலகம் முழுவதும் நடைபெறும் நினைவேந்தல் நிகழ்வுகளை IBC தமிழ் நேரலையில் கொண்டுவருகிறது.
புலம்பெயர் உறவுகளின் உணர்வுகளை ஒன்றிணைக்கும் இந்நிகழ்வில் எமது ஊடக நேயர்களுடன் கைகோர்க்க ஐ.பி.சி தமிழ் தயாராகிறது.
நவம்பர் மாதத்தில் பூக்கும் செங்காந்தள் மலர் (கார்த்திகைப் பூ), மாவீரர் நாளின் தேசிய மலராகவும் அடையாளமாகவும் கொள்ளப்படுகிறது.
தாயகம் உள்ளிட்ட புலம்பெயர் தமிழர் வாழும் நாடுகள் எங்கும் இடம்பெறவுள்ள இந்த உணர்வெழுச்சி நினைவேந்தல் நிகழ்வுகளை நேரலையில் காண IBC தமிழுடன் இணைந்திருங்கள்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
5ம் ஆண்டு நினைவஞ்சலி