முகம் கண்ணாடி போல ஜொலிக்கனுமா! இந்த ஒரு பழம் போதும்
பெண்கள் ஆண்கள் இருவரையும் பொறுத்தவரையில்,முகத்தை பளபளப்பாகவும், பொலிவாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்றே நினைப்பார்கள்.
இதற்காக அதிக பணத்தை செலவு செய்து அழகு நிலையங்களில் நேரத்தை பெண்கள் மற்றும் ஆண்கள் செலவு செய்கின்றனர்.
இதனால் அதிகமானோர் முகத்தின் அழகுக்காகவும் நிறத்துக்காகவும் பல்வேறுபட்ட செயற்கை கிரீம்களையும் பல தொழிநுட்பங்களையும் பயன்படுத்துகின்றனர்.
பொலிவான முகம்
ஆனால் இந்த செயற்கை முறைகளால் பிற்காலத்தில் பல தோல் நோய்களும் வேறு பல நோய்களும் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
அந்தவகையில், இந்த பிரச்சினைகளை தீர்க்க இயற்கையான முறையில் என்ன செய்ய வேண்டும் என பார்க்கலாம்.
வீட்டிலிருந்தபடியே சரும பிரச்சனைகள் நீங்கி, முகம் பளபளக்க இந்த ஆப்பிள் பழம் மட்டும் போதும்.
இயற்கை வழிமுறை
தண்ணீர் மட்டும் ஆப்பிள் பழச்சாறு இரண்டையும் சம அளவில் கலந்து முகத்தில் ஒரு பருத்தி துணி மூலம் பூசிக்கொள்ளவும்.
இந்த டோனர் சருமத்தின் pH ஐ சமப்படுத்தவும், மென்மையான சருமத்திற்கும் உதவும்.
அரை ஆப்பிளை அரைத்து அதனுடன் ஒரு மேசை கரண்டி தேனுடன் கலந்து முகத்தில் பூசவும், பூசிய பின் 15-20 நிமிடங்கள் விட்டு, வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
இந்த கலவையானது, முகத்தை பிரகாசமாக்க உதவும்.
பள பளப்பான முகம்
நன்றாக துருவிய ஆப்பிலில் ஒரு கரண்டி ஓட்ஸ் சேர்க்கவும்.
பின்னர், கலவையை தோலில் வட்ட இயக்கத்தில் மெதுவாக மசாஜ் செய்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும்.
இந்த ஸ்க்ரப் சருமத்தில் உள்ள இறந்த செல்களை அகற்றி, மென்மையான நிறத்தை வெளிப்படுத்த உதவும்.
இவ்வாறு தொடர்ந்து செய்வதால், அழகான பள பளப்பான முகத்தை பெறலாம்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |