சிறைச்சாலையில் அச்சுக்கூடத்தில் வேலை செய்யவுள்ள ஞானசாரதேரர்
தனது மீதமுள்ள சிறைத் தண்டனையை அனுபவித்து வரும் பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறை அச்சுப் பிரிவு தொழிலாளர் சேவைக்கு நியமிக்கப்பட உள்ளார்.
சிறைவாசத்தின் போது, தண்டனை பெற்ற கைதிகளுக்கு விதிக்கப்பட்ட சிறை சீருடையை, காவியுடைக்கு பதிலாக அணியுமாறு அதிகாரிகள் அவரிடம் தெரிவித்தபோது, அவர் ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தாலும், பின்னர் பரிந்துரைக்கப்பட்டசிறை சீருடையை அணிய ஒப்புக்கொண்டார்.
மைத்ரிபால சிறிசேனவால் பொது மன்னிப்பு
நீதிமன்ற அவமதிப்புக்காக விதிக்கப்பட்ட ஆறு வருட சிறைத் தண்டனையில் சுமார் ஒன்பது மாதங்கள் அனுபவித்து வந்த ஞானசார தேரருக்கு, 2019 மே மாதம் அப்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டது.

இருப்பினும், கடந்த செப்டம்பர் மாதம் உச்ச நீதிமன்றம் ஒரு தீர்ப்பை வழங்கி, அந்த பொது மன்னிப்பை செல்லாததாக்கியது.
சிறைத் தண்டனையை உடனடியாக நிறைவேற்றுமாறு உத்தரவு
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, ஞானசார தேரர் தனது மீதமுள்ள சிறைத் தண்டனையை அனுபவிக்குமாறு உத்தரவிடப்பட்டார். பின்னர், அவர் காணாமல் போனதாக வந்த தகவல்களின் காரணமாக மேல்முறையீட்டு நீதிமன்றம் அவருக்கு எதிராக ஒரு திறந்த பிடியாணை பிறப்பித்தது.

அதன்படி, ஞானசார தேரரின் மீதமுள்ள சிறைத் தண்டனையை உடனடியாக நிறைவேற்றுமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |