'ஒரே நாடு ஒரே சட்டம்' தொடர்பில் ஞானசார தேரர் வெளியிட்டுள்ள தகவல்
காலம்காலமாக புரையோடிப் போயுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண சிறிலங்கா அரச அதிபர் முன்னெடுத்த தீர்மானம் மகிழ்ச்சிக்குரியது என 'ஒரே நாடு ஒரே சட்டம்' செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் (Galagoda Aththe Gnanasara) தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள தேரர்,
இலங்கையினுள் ஒரே நாடு-ஒரே சட்டம் என்ற கொள்கையை உறுதிப்படுத்துவதற்கு இதுவரையில் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் பல்வேறு காரணிகளினால் தோல்வியடைந்தன.
ஒரே நாடு - ஒரே சட்டம் என்ற எண்ணக்கருவை செயற்படுத்துவதில் அரசியல் காரணிகளும், அரசியல் நோக்கங்களும் ஒருபோதும் செல்வாக்கு செலுத்தக்கூடாது.
ஒரே-நாடு, ஒரே சட்டத்தை நிலைநாட்ட ஜனாதிபதி செயலணியை நியமித்துள்ளமை மகிழ்வுக்குரியது.
அனைத்து இன மக்களின் மதம்,கலாச்சாரம் மற்றும் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பது அவசியமாகும்.
அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் வகையில் முரண்பாடற்ற விதத்தில் ஒரே நாடு - ஒரே சட்டம் உருவாக்கத்திற்கான சட்ட வரைபு தயாரிக்கப்படும்.
அனைத்து தரப்பினரும் அந்த இலக்கை அடைய ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
இதுவரை காலமும் இருந்த பிரச்சினைகளுககு இனிவரும் காலங்களிலாவது சிறந்த தீர்வை பெற்றுக் கொள்ள வேண்டும்.
அனைத்து விடயங்களையும் அரசியல் கண்ணோட்டத்தில் பார்த்து ஒருபோதும் தீர்வு பெற்றுக் கொள்ள முடியாது என்றார்.