ஞானசார தேரருக்கு விளக்கமறியல் : நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Maithripala Sirisena Galagoda Aththe Gnanasara Thero Law and Order
By Sathangani Oct 04, 2026 09:57 AM GMT
Report

புதிய இணைப்பு

நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட கலகொட அத்தே ஞானசார தேரர் நாளை (5) வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஞானசார தேரர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று (04) முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் இணைப்பு

சற்றுமுன் நீதிமன்றுக்கு அழைத்து வரப்பட்ட ஞானசார தேரர்!

பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர், கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றவியல் விசாரணைப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று (03) அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

அதற்கமைய, அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்காக காவல்துறையினரால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

ஞானசார தேரருக்கு விளக்கமறியல் : நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Gnanasara Thera To Be Produced Before Court Today

முதலாம் இணைப்பு

இன்று நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள ஞானசார தேரர்!

கைது செய்யப்பட்ட பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, ஞானசார தேரர் இன்று (04) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இவ்வாறு முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

நீதிமன்றத்தினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த ஞானசார தேரர், நேற்று (3) களுத்துறை தீனியாவள பகுதியில் மறைந்திருந்தபோது கைது செய்யப்பட்ட நிலையில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிற்கு அழைத்து வரப்பட்டார்.

யாழில் கொடூரம் : தொடருந்து பாதையில் படுத்திருந்து பாடல் கேட்ட தந்தைக்கு நேர்ந்த விபரீதம்

யாழில் கொடூரம் : தொடருந்து பாதையில் படுத்திருந்து பாடல் கேட்ட தந்தைக்கு நேர்ந்த விபரீதம்

 நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு

அத்துடன் மறைந்திருக்கும் முயற்சியாக அவர் தனது சிம் (SIM) அட்டையையும் வாகனத்தையும் மாற்றியிருந்ததையும் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர்.

மேன்முறையீட்டு நீதிமன்றம் அண்மையில் ஞானசார தேரரை கைது செய்வதற்கான பிடியாணை ஒன்றை பிறப்பித்திருந்தது.

ஞானசார தேரருக்கு விளக்கமறியல் : நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Gnanasara Thera To Be Produced Before Court Today

2016 ஜனவரியில் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில், காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் ஏக்னலிகொட தொடர்பான வழக்கின் விசாரணையின்போது நீதிமன்றத்தை அவமதித்ததாகக் கூறப்படும் நான்கு குற்றச்சாட்டுகள் தொடர்பிலேயே இந்தப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நான்கு குற்றச்சாட்டுகளிலும் ஞானசார தேரர் 2018 ஓகஸ்ட் 8 அன்று குற்றவாளியாகக் காணப்பட்டார். அவருக்கு மொத்தம் 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டாலும், அத்தண்டனைகளை ஆறு வருட காலப்பகுதிக்குள் ஒரே நேரத்தில் அனுபவிக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

பிரித்தானியாவால் ஐந்து ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஆப்பிரிக்காவில் உயிரிழப்பு

பிரித்தானியாவால் ஐந்து ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஆப்பிரிக்காவில் உயிரிழப்பு

ஜனாதிபதி பொதுமன்னிப்பு 

பின்னர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவருக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியதைத் தொடர்ந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

காணாமல் போன ஊடகவியலாளர் பிரகீத் ஏக்னலிகொடவின் மனைவி சந்தியா ஏக்னலிகொட உள்ளிட்ட குழுவினர் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், அந்த ஜனாதிபதி பொதுமன்னிப்பு செல்லுபடியாகாது என்று செப்டெம்பர் 10 அன்று தீர்ப்பளித்தது.

ஞானசார தேரருக்கு விளக்கமறியல் : நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Gnanasara Thera To Be Produced Before Court Today 

உயர் நீதிமன்றத் தீர்ப்பைத் தொடர்ந்து ஞானசார தேரருக்கு எதிரான தண்டனையை நடைமுறைப்படுத்தாமை குறித்து மனுதாரர்கள் தாக்கல் செய்த மனு, செப்டெம்பர் 29 அன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்த போதிலும், ஞானசார தேரர் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. இதனையடுத்து, அவரைக் கைது செய்வதற்கான பிடியாணையை மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

பிரித்தானியாவால் ஐந்து ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஆப்பிரிக்காவில் உயிரிழப்பு

பிரித்தானியாவால் ஐந்து ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்ட இலங்கைத் தமிழர் ஆப்பிரிக்காவில் உயிரிழப்பு


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 
ReeCha
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022