மில்லியன் கணக்கில் இழப்பீடு பெற்றுள்ள ஞானவதி! சபையில் போட்டுடைத்த அமைச்சர்
அரகலய போராட்டத்தில் சேதமமைடைந்த வீடுகளுக்கு இழப்பீடு பெற்ற மற்றொரு குழுவின் பெயர்களையும், இழப்பீட்டுத் தொகையையும் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) வெளியிட்டார்.
இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டு அவர் இந்த விபரங்களை வெளிப்படுத்தினார்.
மில்லியன் கணக்கான பணம்
இதன்படி, 246, இசுருபுர, நிதாஹஸ் மாவத்தை, அனுராதபுர தேவாலயம், டபிள்யூ. எம். ஞானவதி என்ற பெண்ணுக்கு 28 மில்லியன் ரூபா இழப்பீடு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, கெஸ்பேவ மேயர் லக்ஷ்மன் பெரேராவுக்கு இழப்பீடாக 696 மில்லியன் ரூபா கிடைத்துள்ளதாக அமைச்சர் நளிந்த தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மொரட்டுவ மேயர் சமன்லால் பெர்னாண்டோவிற்கு 73.044 மில்லியன் ரூபா மற்றும், அவரது மகன் ரமேஷ் சானக பெர்னாண்டோ 1.88 மில்லியன் ரூபா இழப்பீடாக பெற்றுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
காரணம்
இந்த நிலையில், குறித்த இழப்பீடுகள், அந்த காலக்கட்டத்தில் எழுந்த அரசியல் எதிர்ப்புகளை அடக்குவதற்காகவே தவிர, வேறு எந்த உண்மையான காரணத்திற்காகவும் வழங்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இது தொடர்பான மேலும் பல நபர்களில் பெயர்கள் உள்ளதாகவும் அவற்றை எதிர்வரும் காலங்களில் வெளியிட எதிர்பார்த்துள்ளதாகவும் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
