சரிந்தது தங்கம் மற்றும் வெள்ளியின் விலை
கடந்த பெப்ரவரி மாத இறுதியில் மத்திய கிழக்கு மோதல் தொடங்கியதிலிருந்து தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் அதிக ஏற்ற இறக்கம் காணப்படுகிறது.
அமெரிக்க - ஈரான் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததாலும், ஹார்முஸ் ஜலசந்தியை மூடுவதாக ட்ரம்ப் அச்சுறுத்தியதால் எண்ணெய் விலைகள் உயர்ந்ததாலும் தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் இந்த வாரம் பெரும் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.
தற்போதைய மோதல் எவ்வளவு காலம் மற்றும் எவ்வளவு தீவிரமாக நீடிக்கிறது என்பதைப் பெருமளவில் சார்ந்து, தங்கத்தின் விலைகள் நிர்ணயிக்கப்படும் என HDFC வங்கி தனது சமீபத்திய அறிக்கையில் தெரிவித்துள்ளது.
கச்சா எண்ணெய் விலை
ஈரானுக்கு சுங்கக் கட்டணம் செலுத்திய சர்வதேச கடல் பகுதியில் உள்ள ஒவ்வொரு கப்பலையும் அமெரிக்கப் படைகள் இடைமறிக்கும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

அமெரிக்காவின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை பாரிய அளவில் அதிகரித்துள்ளது.
அமெரிக்க மசகு எண்ணெய் 8 சதவீதம் அதிகரித்து ஒரு பீப்பாய் 104.24 டொலராக உயர்ந்துள்ளது. பிரெண்ட் மசகு எண்ணெய் 7 சதவீதம் அதிகரித்து ஒரு பீப்பாய் 102.29 டொலராகப் பதிவாகியுள்ளது.
தங்கத்தின் விலை
இவ்வாறான பின்னணியில், சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இதன்படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,720.76 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
அதேபோன்று, வெள்ளியின் விலையும் 74.4 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |