அரசுடமையாக்கப்பட்ட பெருந்தொகை தங்கம்
சட்டவிரோதமாக டுபாயில் இருந்து இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட நான்கு கோடியே 72 லட்சத்து 11 ஆயிரம் ரூபா பெறுமதியான 2.98 கிலோ கிராம் தங்க பிஸ்கட்டுகளை கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
கொழும்பு தெமட்டகொடை பிரதேசத்தை சேர்ந்த 35 வயதான நபர் இன்று அதிகாலை இந்த தங்க தொகையை இலங்கைக்கு கடத்தி வந்துள்ளார்.
விமான நிலையத்திற்கு வெளியில் கொண்டு செல்ல முயற்சிதத சந்தேக நபர்
சந்தேக நபர் கொண்டு வந்த பொருட்களுக்கு இருந்த இந்த தங்க தொகையை பயண பொதியில் இருந்து வெளியில் எடுத்து, பொருட்களை எடுத்துச் செல்லும் ட்ரோலியில் மறைத்து வைத்து விமான நிலையத்திற்கு வெளியில் கொண்டு செல்ல முயற்சித்த போது, சுங்க அதிகாரிகள் சந்தேக நபருடன் தங்கத்தை கைப்பற்றியுள்ளனர்.
116 கிராம் எடை கொண்ட 16 தங்க பிஸ்கட்டுகள் மற்றும் நான்கு தங்கக்கட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளன. கைப்பற்றப்பட்டுள்ள தங்கம் அரசுடமையாக்கப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)