கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் கொள்ளை!
வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் ஆலயத்திற்கு வழிபடச் சென்ற பெண் ஒருவரிடம் சங்கிலி அபகரிக்கப்பட்டுள்ளதாக வவுனியா காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, உக்குளாங்குளம் பகுதியில் உள்ள சிவன் ஆலயத்தில் வழிபாடு மேற்கொள்வதற்காக பெண் ஒருவர் சென்றுள்ளார். இதன்போது ஒரு மோட்டர் சைக்கிளில் வந்த இருவர் அந்தப் பெண்ணை ஆலயம் அருகில் வழிமறித்து ஒருவரிடைய பெயரைக் கூறி ஆலயத்தில் குறித்த நபர் உள்ளாரா எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.
அதற்கு அவர் பதில் அளிக்க முற்படுகையில் அவர் அணிந்திருந்த சங்கிலியை அறுத்துக் கொண்டு இருவரும் தப்பிச் சென்றுளளனர். குறித்த பெண் அணிந்திருந்த தங்கச் சங்கிலி மூன்று பவுண் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் வவுனியா காவல் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்து வவுனியா காவல்துறையினர் தீவிர விசாரணைகளை முன்னெத்துள்ளனர்.