வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர் திருவிழாவில் தங்கச் சங்கிலிகள் அறுப்பு!
Jaffna
Temple
Compline
Pointpetro
Chines
By MKkamshan
யாழ் வடமராட்சி - வல்லிபுர ஆழ்வார் ஆலயத்தில் நேற்று (15) நடைபெற்ற தேர்த்திருவிழாவில் 5 தங்கச் சங்கிலிகள் களவாடப்பட்டுள்ளதாக பருத்தித்துறை காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
வழமையை விட நேற்றைய தினம் பக்த அடியவர்கள் குறைவாக ஆலயத்திற்கு வருகை தந்திருந்த நிலையில் இச்சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்த திருவிழாவில் கலந்து கொண்டிருந்த 5 பக்தர்களிடம் தங்க சங்கிலிகள் களவாடப்பட்டுள்ளதாக பருத்தித்துறை காவல்துறையினரிடம் முறையிடப்பட்டுள்ளது.
அவ்வாறு களவாடப்பட்ட ஐந்து தங்க சங்கிலிகளும் 8 அரை பவுண் நிறையுடைய சுமார் 10 இலட்ச ரூபாய் பெறுமதியானது என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
முறைப்பாட்டின் பிரகாரம் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


ஜனாதிபதிகளின் சிறப்புரிமை முடிவை ஆரம்பித்துவைத்த ரணிலின் கைது 13 மணி நேரம் முன்

ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா?
5 நாட்கள் முன்