கட்டுநாயக்கவில் சிக்கிய கோடிக்கணக்கான மதிப்புள்ள தங்க ஜெல் உருண்டைகள்
சுமார் 18 கோடி பெறுமதியான தங்க ஜெல் உருண்டைகளை தயாரித்து மலக்குடல் மற்றும் பயணப் பொதிகளில் மறைத்துக்கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த 06 இலங்கையர்கள் விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கல்முனை, மூதூர், கொழும்பு-10, கல்கெடிஹேன் மற்றும் மினுவாங்கொடை ஆகிய இடங்களில் வசிக்கும் 30 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட ஆறு பேர் அடிக்கடி விமானத்தில் பயணிக்கின்றனர்.
துபாயிலிருந்து இந்தியாவின் சென்னைக்கு வந்த அவர்கள் நேற்று மதியம் 01.20 மணியளவில் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் 6E-1175 மூலம் கட்டுநாயக்கா விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
மேலதிக விசாரணை
அதன் போது, அவர்களில் 4 பேர் மலக்குடலில் தங்க ஜெல் உருண்டைகளை மறைத்து வைத்திருந்ததாகவும், மேலும் இருவர் 08 கிலோ 632 கிராம் எடையுள்ள தங்க ஜெல் உருண்டைகளை பையில் மறைத்து வைத்திருப்பதும் தெரியவந்துள்ளது.
அதனை தொடர்ந்து, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |