என்றுமில்லா விலை மதிப்பை கடந்த தங்கம்: ட்ரம்பின் வரிகளையும் மிஞ்சிய காரணிகள்
சந்தையில் தங்கத்தின் விலை அவுன்ஸ் ஒன்றுக்கு 3,100 டொலர்களை தாண்டியுள்ளது, இது வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்த விலையாக பதிவாகியுள்ளது.
நேற்று (31) உலக சந்தையில் 3,128.06 டொலர்களாக பதிவாகியிருந்த 24 கரட் தங்க அவுன்ஸின் விலை, இன்று (01) மேலும் அதிகரித்து அவுன்ஸ் ஒன்றுக்கு $3,137 ஆக பதிவாகியுள்ளது.
ட்ரம்பின் வரிகள் மற்றும் காரணங்கள்
இந்த நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்துள்ள மற்றும் விதிக்க திட்டமிட்டுள்ள வரிகள் தங்கத்தின் விலை உயர்வுக்கு கூடுதல் பங்களிப்பை ஏற்படுத்தியிருந்தாலும் அதைப் பாதித்த பிற காரணிகளும் உள்ளன.
இதன்படி, உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகளால் பெரிய அளவிலான தங்க கொள்முதல்களால் உருவாக்கப்பட்ட தேவை இதற்கு ஒரு காரணமாகும்.
உலகின் மிகப்பெரிய பொருளாதாரமான அமெரிக்க பெடரல் ரிசர்வ் வட்டி வீதங்கள் மேலும் குறையும் போக்கு மற்றொரு காரணம்.
அத்துடன், மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவில் நிலவும் புவிசார் அரசியல் கொந்தளிப்புகளும் இதற்கு பங்களித்துள்ளன.
அதிகபட்ச மதிப்பு
இதேவேளை, தங்கத்தின் விலையில் ஏற்பட்ட வரலாறு காணாத உயர்வுக்கு மற்றொரு காரணம், தங்கத்துடன் இணைக்கப்பட்ட பரிவர்த்தனை-வர்த்தக நிதிகளில் முதலீடு அதிக அளவில் வருவது ஆகும்.
தங்கம் சார்ந்த பரிவர்த்தனை வர்த்தக நிதிகள் இன்றைய உலகில் ஒரு புதிய முதலீட்டு போக்காக உள்ளன.
இந்த நிலையில், உலக சந்தையில் தங்கத்தின் விலை 1986 ஆம் ஆண்டுக்குப் பிறகு 2025 ஜனவரி காலாண்டில் அதன் மிக உயர்ந்த காலாண்டு வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
2025 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை வரலாற்றில் அதன் அதிகபட்ச மதிப்பை 20 முறை தாண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
