இலங்கையில் திடீரென அதிகரித்த தங்க விலை
புதிய இணைப்பு
இலங்கையில் இன்று காலை தங்கவிலையில் எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 3,000 ரூபாயால் அதிகரித்துள்ளது.
அதன்படி 24 கரட் தங்கம் ஒரு பவுண் 393,000 ரூபாயாகவும் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 361,500 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 49,125 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 45,188 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
முதலாம் இணைப்பு
தங்கம் வாங்கவுள்ளோருக்கு முக்கிய அறிவிப்பு
சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்றைய தினம் திடீரென அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 4,513.15 அமெரிக்க டொலர்களாகவும், ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 70.48 டொலர்களாகவும் பதிவாகியுள்ளது.
அந்தவகையில் இலங்கையில் இன்று காலை தங்கவிலை எவ்வித மாற்றமும் இன்றி அதே விலையில் விற்பனை செய்யப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்றைய நிலவரம்
அதன்படி, 24 கரட் தங்கம் ஒரு பவுண் 390,000 ரூபாயாகவும் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 358,800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 48,750 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,850 ரூபாயாகவும், விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மத்திய கிழக்கு போரால் இலங்கையில் பாரிய பொருளாதார சவால்! 10 மணி நேரம் முன்
ஈழப் போராட்டத்துடன் பின்னிப் பிணைந்த போர்க்கால அரங்கு…
3 நாட்கள் முன்